Spicy Drumstick Pickle Recipe - முருங்கை ஊறுகாய் செய்முறை


முருங்கைக்காய் ஊறுகாய் செய்வது எப்படி என்பதை அறிக. ரெசிபி தமிழிலில்!  உங்கள் கவனத்தைத் தூண்டக்கூடிய ஓர் சுவையான முருங்கைக்காய் ஊறுகாய் செய்முறை படிப்படியான செய்முறைகளுடன். 

தேவையான பொருட்கள் 

  • பொடியாக நறுக்கிய முருங்கை - 2
  • வெந்தயம் - 1 டீஸ்பூன் 
  • சீரகம் - 1 டீஸ்பூன் 
  • வரமிளகாய் - 4
  • நல்லெண்ணெய் - 100 கிராம் 
  • உப்பு - தேவைக்கு 
  • பெருங்காயம் - தேவைக்கு 

செய்முறை 

  1. வெந்தயம், சீரகம், வரமிளகாயை வறுத்துப் பொடிக்கவும்.

  2. வாணலியில் எண்ணெய் விட்டு சுத்தம் செய்த முருங்கையைப் போட்டு உப்பு சேர்த்து வதக்கவும்.

  3. வறுத்துப் பொடித்த பொடி வகைகளைச் சேர்த்து மிதமான தீயில் பதினைந்து நிமிடங்கள் வைத்திருந்து இறக்கவும்.

Post a Comment

0 Comments