Donads Recipe - டோனட்ஸ் வகை I

 


50 பேருக்கு போதுமான சுவையான டோனட்ஸ் 

தேவையான பொருட்கள் 

  • கோதுமைமாவு - 500கிராம் 
  • மாஜரின் - 50 கிராம் 
  • முட்டை - 1
  • சீனி - 5 மே. க (நிரப்பி)
  • பேக்கிங் பவுடர் - 1 தே. க (மட்டமாக)
  • தேங்காயெண்ணை - 1/2 போத்தல் 
  • வனிலா - 1 மே. க 
  • கோதுமைமாவு - 2 மே. க (நிரப்பி) பலகைக்குப் பூசுவதற்கு

செய்முறை 

  1. மாவுடன் பேக்கிங் பவுடர் கலந்து நான்கு முறை அரித்து வைத்துக் கொள்க.

  2.  பாத்திரத்தில் மாஜரினையிட்டுச் சீனியும் சேர்த்து சீனி கரையும் வரை அடித்துக்கொண்ட பின்பு, அதனுள் முட்டையை உடைத்துவிட்டு, அரித்த கோதுமைமாவும் வனிலாவும் சேர்த்து அளவிற்குத் தண்ணீர் விட்டுக் கையிலொட்டாத பதத்திற்கு அழுத்தமாகப் பிசைந்து குழைத்துக் கொள்க.

  3. பின்பு குழைத்த  கலவையை எடுத்துக் கோதுமை மாவு பூசிய பலகையில் வைத்துக் காலங்குலத் தடிப்பாக உருட்டிக் கொண்டு, வட்ட வடிவமான கட்டரினால் வெட்டியெடுத்து நடுவே சுட்டு விரலினால் துவாரம் அமைத்துக் கொண்ட பின்பு, கொதிக்கும் எண்ணெயிலிட்டுப் பொன்னிறமாகப் பொரித்தெடுத்து ஆறிய பின்பு பரிமாறலாம்.

குறிப்பு 

  • போனட்சைக் கராச் சிற்றுண்டியாகப் பயன்படுத்துவதாயின் சீனிக்குப் பதிலாக உப்பும் இரண்டு தேக்கரண்டி   தனிமிளகாய்த் தூளும் சேர்த்துக் குழைத்துக் கொள்ளலாம்.

  • மாவிற்கு சீனி சேர்க்காமல் குழைத்து, மேற்கூறிய வண்ணம் பொரித்தெடுத்து, அச்சுப்பலகாரத்திற்குப் பாகு காய்ச்சுவது போலக் காய்ச்சி, அப்பாகில் புரட்டியெடுத்தும் பரிமாறலாம்.       

Post a Comment

0 Comments