Delicious Bibikkan Recipe - பிபிக்கான்

பிபிக்கன் ஒரு பிரபலமான இலங்கை உணவாகும். தேங்காயை மூலப்பொருளாக கொண்டு தயாரிக்க கூடிய ஒரு சுவையான இனிப்பு வகையாகும். இதன் முழுமையான ரெசிபியை தமிழ் பெற்றுக்கொள்ளுங்கள்.

 50 - 55 துண்டுகள் 

தேவையான பொருட்கள் 

  • பேரீச்சம்பழம் - 1000 கிராம் 
  • கித்துள் / சர்க்கரை - 1000 கிராம் 
  • சீனி - 250 கிராம் 
  • ரவை - 500 கிராம் 
  • கோதுமை மாவு - 100 கிராம் 
  • பேக்கிங் பவுடர் - 2 மே . க (மட்டாக)
  • தேங்காய் - 1
  • இஞ்சி - 250 கிராம் 
  •  கஜு - 250 கிராம் 
  • பிளம்ஸ் - 250 கிராம் 
  • கச்சான் முத்து - 250 கிராம் 
  • ஏலப்பொடி - 1 மே .க (மட்டாக)
  • வனிலா - 3 மே .க
  •  மாஜரின் - 1 மே .க (மட்டாக)

செய்முறை 

  1. ரவையைத் துப்பரவாக்கி ஓரளவாக வறுத்து வைத்துக் கொள்க.

  2. பேரீச்சம்பழத்தைத் துப்பரவாக்கி விதை நீக்கிச் சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்க.

  3. கச்சான் முத்தை வறுத்துத் துப்பரவாக்கிப் புடைத்துப் பாதி முத்துக்களாக எடுத்து வைத்துக் கொள்க.

  4. கஜுவைத் துப்பரவாக்கிச் சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்க.

  5. கோதுமை மாவுடன் பேக்கிங் பவுடர் கலந்து நான்கு முறை அரித்துக் கொள்க.

  6. இஞ்சியைத் துப்பரவாக்கிப் பசுந்தையாக அரைத்தெடுத்து 250 கிராம் சீனியும் 1/2 தம்ளர் தண்ணீரும் சேர்த்துப் பாகு காய்ச்சிப் பாகு பிசுபிசுப்பான பதத்தையடைந்ததும் இறக்கி வைத்துக் கொள்க.

  7. தேங்காயைத் துருவி வைத்துக் கொள்க.

  8. கித்துள் அல்லது சர்க்கரையை பாத்திரத்தில் போட்டு 4 தம்ளர் தண்ணீர் விட்டு 3 மணி நேரம் ஊற வைத்துக் கரைத்து வடிகட்டிக் காய்ச்சுக. பாணி தடிக்கத் தொடங்கும் போது துருவி வைத்துள்ள தேங்காய்ப் பூவையும் சேர்த்துக் கிளறி இறக்கி வைத்துக் கொள்க.

  9. பின்பு பாணி நன்றாக ஆறியதும் அதனுள் வறுத்த ரவை, பேரீச்சம்பழம், இஞ்சிப்பாகு, கோதுமை மாவு , கஜு, பிளம்ஸ், கச்சான் முத்து, ஏலப்பொடி, வனிலா என்பவற்றைச் சேர்த்து நன்றாக அடித்துக் கொண்ட பின் கேக் தட்டிற்கு ஒயில் பேப்பர் பரவி மாஜரின் பூசி, அடித்த கலவையை ஊற்றி பேக் செய்து ஆறிய பின்பு துண்டுகளாக வெட்டியெடுத்துப் பரிமாறலாம். 

Post a Comment

0 Comments