Corn Aloo Paneer Tikki Recipe - கார்ன் ஆலு பனீர் டிக்கி

 
ஒரு சுவையான வெஜ் ஸ்ட்ரீட் சிற்றுண்டிக்கான செய்முறை இங்கே! கார்ன் ஆலு பன்னீர் டிக்கி வெளியில் கிரிஸ்பியாகவும் , உள்ளே மென்மையாகவும் இருக்கக்கூடிய ஒரு மொறுமொறுப்பான சிற்றுண்டியாகும். ரெசிபி தமிழில் இங்கே!

தேவையான பொருட்கள் 

  • ஸ்வீட்கார்ன் - 2 கப் 
  • உருளைக்கிழங்கு - 250 கிராம் 
  • பனீர் - 100 கிராம் 
  • கடலை மாவு - 1 கைப்பிடி 
  • புதினா - தேவைக்கு 
  • கொத்துமல்லி - தேவைக்கு 
  • சீரகத்தூள் - தேவைக்கு 
  • சாட் மசாலா - தேவைக்கு 
  • உப்பு - தேவைக்கு 
  • பச்சைமிளகாய் - 2
  • நெய் - பொரிக்க

செய்முறை 

  1. கார்னை அரைத்துக்கொள்ளவும்.உருளைக்கிழங்கை வேகவைத்துத் தோலுரிக்கவும். பனீரைத் துருவிக்கொள்ளவும். 

  2. மூன்றையும் ஒன்றாக்கி, அதனுடன் கடலை மாவு, புதினா, கொத்துமல்லி, சீரகத்தூள், சாட் மசாலா, உப்பு, நறுக்கிய பச்சைமிளகாய் சேர்த்து நன்கு பிசைந்து வடைகளாக தட்டவும். 

  3. நெய்யைக் காயவைத்து மிதமான சூட்டில் வடைகளை இருபுறமும் சிவந்து வரும்வரை பொரித்து எடுக்கவும்.   

Post a Comment

0 Comments