Chickpea Flour Cake - கடலைமா கேக்

 

சுலபமான கடலைமா கேக் ரெசிபி தமிழில். மிகவும் சில அன்றாட பொருட்களை பயன்படுத்தி வீட்டிலேயே ஓர் மாறுபட்ட கேக் ரெசிபியை இன்றே முயற்சியுங்கள்.

25 துண்டுகள் 

தேவையான பொருட்கள் 

  • கடலைமா - 250 கிராம் 
  • சீனி - 250 கிராம் 
  • மாஜரின்- 250 கிராம் 
  • முட்டை - 5
  • வனிலா - 1 மே . க 
  • ஓரேஞ் சிறப் - 1  மே .க 
  • பேக்கிங் பவுடர் - 1 மே .க 
  • கஜீ - 100 கிராம் 

செய்முறை 

  1. கடலைமாவிற்கு பேக்கிங் பவுடர் சேர்த்து 5 முறை நன்றாக அரிக்கவும்.

  2. சீனியை கிரைண்டரிலிட்டு அரைத்து எடுத்துக் கொள்க.

  3. முட்டையை உடைத்து பாத்திரத்தில் விட்டு நன்றாக நுரை பொங்கும் வண்ணம் அடித்து அதனுள் சீனியையும் இட்டு சீனி கரையும் வண்ணம் அடித்துக் கொள்க.

  4. மாஜரினை வாயகன்ற பாத்திரத்திலிட்டு கரையும் வரை நன்றாக அடித்து அதனுள் முட்டைக் கலவையை சிறிது சிறிதாக ஊற்றி முழுவதுமாக சேர்த்து அடித்துக் கொண்ட பின்பு கடலைமவைச் சிறிது சிறிதாகத் தூவிச் சேர்த்து வனிலா, ஓரேஞ் சிறப் என்பன கலந்து அடித்து ஓயில் பேப்பர் பரவி எண்ணெய் பூசிய தட்டில் ஊற்றி பேக் செய்து கொள்க.       

Post a Comment

0 Comments