Vivika Recipe - விவிக்கம் செய்முறை


ஸ்வீட் இட்லி / விவிக்கம் எப்படி செய்வது? செய்முறை தமிழில். விவிக்கம் ஸ்வீட் இட்லி என்றும் அழைக்கப்படுகிறது, இது  தேங்காய் மற்றும் வெல்லத்தால் நிரப்பப்பட்ட ரைஸ் இட்லி வகையாகும். 

தேவையான பொருட்கள் 

  • பச்சரிசி - 2 கப் 
  • உளுந்து - 1/4 கப் 
  • பனைவெல்லம் - 200 கிராம் 
  • நெய் - 100 கிராம் 
  • தேங்காய் - 1/2 மூடி 
  • ஏலக்காய் - 3
  • முந்திரி - 10
  • திராட்சை - 10
  • உப்பு - சிறிது 

செய்முறை 

  1. அரிசி, உளுந்தை தனித்தனியாக ஊறவைத்து, இட்லி மாவு பதத்துக்கு அரைக்கவும்.

  2. உப்பு கலந்து எட்டு மணிநேரம் புளிக்க விடவும்.

  3. பனை வெல்லத்தை மண் நீக்கி காய்ச்சி வடிகட்டி மாவில் சேர்க்கவும். 

  4. பாதித் தேங்காயை பாலெடுத்துச் சேர்க்கவும். மீதி தேங்காயை மெல்லிய பற்களாக நறுக்கி நெய்யில் வறுத்துச் சேர்க்கவும்.

  5. ஏலப் பொடி போட்டுக் கலக்கவும்.இட்லித் தட்டில் நெய் தடவி மாவை ஊற்றி இட்லிகளாக வார்க்கவும்.ஸ்வீட் விவிக்கங்கள் தயார்.     

Post a Comment

0 Comments