Varupayaru Recipe - வறுபயறு செய்முறை

 
வறுபயறு ரெசிபி தமிழில் பெற்றுக்கொள்ளுங்கள். இது "வளைகாப்பு" நிகழ்வுகளில் பெரும்பாலாக காணப்படும் ஓர் உணவாகும். வறுபயறு என்றால் "உலர்ந்த பீன்ஸ்" அல்லது "உலர் வறுத்த பருப்பு வகைகள்" என்று பொருள்படும்.


தேவையான பொருட்கள் 

  • உடுப்பி ருச்சி கொரியண்டர் சூப் பவுடர் - 1 பக்கெற் 
  • காராமணி - 100 கிராம் 
  • மொச்சை - 100 கிராம் 
  • பச்சைப் பயறு - 100 கிராம் 
  • கொள்ளு - 100 கிராம் 
  • கறுப்புக் கொண்டைக் கடலை - 100 கிராம் 
  • காய்ந்த பட்டாணி - 100 கிராம் 
  • வேர்க்கடலை - 100 கிராம் 
  • காய்ந்த மிளகாய் - 8 
  • மஞ்சள் கிழங்கு - 1 துண்டு 
  • உப்பு - தேவைக்கு 

செய்முறை 

  1. முதல்நாள் இரவே ஊறவைத்த தானியங்களைத் தனித்தனியாக வெறும் வாணலியில் வறுத்து எடுக்கவும்.

  2. மஞ்சள் கிழங்கு, சூப் பவுடர், உப்பு, மிளகாய் இவற்றை விழுதாக அரைக்கவும்.

  3. விழுதை வறுத்த பயறின் மேல் தூவி, வெயிலில் நன்கு காயவைத்து எடுத்து வைக்கவும்.எத்தனை நாட்கள் ஆனாலும் கெடாது.      

Post a Comment

0 Comments