Uluththam puddu - உழுத்தம் பிட்டு


 2 பேர் சுவைக்க தக்க சுவையான உழுத்தம் பிட்டு 

தேவையான பொருட்கள் 

  • வறுத்த அரிசி மாவு - 1 சுண்டு(தலைத்தட்டி)
  • உழுந்து மாவு - 1/4 சுண்டு 
  • உப்பு - அளவிற்கு 
  • தண்ணீர் - அளவிற்கு

செய்முறை 

  1. அரிசி மாவு, உழுந்து மாவு என்பவற்றை வாயகன்ற பாத்திரத்திலிட்டு உப்புத்தூள் அளவிற்கு சேர்த்து நன்கு கலந்து கொள்க.
  2. பின்பு மாவினுள் நகச் சூடான தண்ணீரை அளவாக ஊற்றி குழைத்து, கொத்தி அவித்தெடுத்து சூட்டுடனேயே பரிமாறலாம்.

குறிப்பு 

**விரும்பினால் 5 மே .க  நல்லெண்ணெயை கொதிக்க வைத்து 3 மே.க சிறிதாக வெட்டிய வெங்காயம் இட்டு பொன்னிறமாக வாதங்கவிட்டு அதனுள் பிட்டையிட்டு நன்கு சேர்த்து இறக்கிக் கொள்க.இவ்வாறு செய்வதால் பிட்டு நீண்ட நேரத்திற்குக் காய்ந்து போகாமலிருக்கும்.  

**சிறிதாக வெட்டிய 2 மே .க வெங்காயம், 1 மே .க  பச்சைமிளகாய் என்பவற்றை 4 மே.க நல்லெண்ணெயில் வதங்கவிட்டு அதனுள் 2 முட்டையை உதைத்து விட்டு பின் அதனுள் உப்புத்தூள், மிளகுத்தூள் என்பவற்றை அளவிற்கு  இட்டு நன்றாகக் கிளரி முட்டை பொரிந்து வரும்போது புட்டையிட்டுச் சேர்த்து இறக்குக.          

Post a Comment

0 Comments