Sweet Torque - சுவையான இனிப்பு முறுக்கு செய்வது எப்படி !!

 


20 பேருக்கு போதுமான இனிப்பு முறுக்கு

தேவையான பொருட்கள் 

  • சீனி - 3 மே.க (நிரப்பி)
  • ரவ்வை - 100கிராம் 
  • அவித்த கோதுமை மாவு - 100கிராம் 
  • முட்டை - 1
  • உப்பு - அளவிற்க்கு 
  • பால் மா - 1மே. க (நிரப்பி)
  • மாஜரின் - 1 தே .க(நிரப்பி)
  • தண்ணீர் -  அளவிற்க்கு
  • பேக்கிங் பவுடர் - 1 தே. க(மட்டமாக) 
  • தேங்காய்எண்ணெய் - 1/2 போத்தல் 

செய்முறை 

  1. ரவ்வையை துப்பரவாக்கி அரித்து ஓரளவாக வறுத்து வைத்துக் கொள்க.

  2. பாத்திரத்தில் முட்டையை உடைத்துவிட்டுச் சீனியும் சேர்த்து நன்கு அடித்துக் கொண்ட பின்பு ரவ்வை, பால்மா, கோதுமைமாவு, பேக்கிங் பவுடர், மாஜரின், உப்பு என்பவற்றையிட்டு நன்றாக பிசைந்து அளவிற்க்குத்  தண்ணீரும் விட்டுக் கையிலொட்டாத பதத்திற்கு அடித்துக் குழைத்துக் கொள்க.

  3. பின்பு முறுக்குரலில் பெரிய துவாரமுள்ள மகிழம்பூ அச்சைப் போட்டு குழைத்தமாவை அடைத்து உள்ளங்கையளவு வட்டங்களாக எண்ணெய் பூசிய வாழையிலையில் பிழிந்து, கொதிக்கும் எண்ணெயில் போட்டுப் பொன்னிறமாக பொரித்தெடுத்து ஆறிய பின்பு பரிமாறலாம்.

குறிப்பு 

  • முறுக்குரலில் பிழிவதற்குப் பதிலாக, பெரிய துவாரமுடைய ஐசிங் நொசில்ஸ் பாவித்தும் பிழிந்து பேக் செய்தும் கொள்ளலாம்.                

Post a Comment

0 Comments