Puli illa kollu (Horse Gram ) kuzhambu Recipe - புளி இல்லா கொள்ளுக்குழம்பு

 

புளி இல்லாமல், சூப்பர் ஹெல்தி கொள்ளு குழம்பு தயாரிப்பது எப்படி என்பதை அறிக. ரெசிபி தமிழில்!  கொள்ளு குழம்பு நீரிழிவு நோய்க்கும் சிறந்த ஓர் ஆரோக்கியமான உணவாகும்.

தேவையான பொருட்கள் 

  • சுத்தம் செய்த கொள்ளு - 1 கப் 
  • வெங்காயம் - 3
  • தக்காளி - 3 
  • தனியா - 1 டீஸ்பூன் 
  • மிளகு -  1 டீஸ்பூன் 
  • சீரகம் -  1 டீஸ்பூன் 
  • மிளகாய்ப் பொடி - 1 டீஸ்பூன் 
  • கடுகு - தேவையான அளவு 
  • கறிவேப்பிலை - தேவையான அளவு 
  • உப்பு - தேவையான அளவு 
  • கொத்துமல்லி - தேவையான அளவு 

செய்முறை 

  1. கொள்ளை ஊறவைத்து, வேக வைத்து வெந்த தண்ணீருடன் சேர்த்து அரைக்கவும்.

  2. தனியா, மிளகு, சீரகத்தை எண்ணெய் விட்டு வறுத்துப் பொடிக்கவும்.

  3. கடுகு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம், தக்காளியை வதக்கவும். அரைத்த விழுது, வறுத்துப் பொடித்தது, உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட்டு மல்லித்தழையைத் தூவவும்.  

Post a Comment

0 Comments