Home made Barley Kebab Recipe - பார்லி கபாப் செய்முறை

 
வீட்டில் பார்லி கபாப் செய்வது எப்படி என்று அறிக. வேகவைத்த பார்லியை  மசாலாக்களுடன் சேர்த்து சுவையான மற்றும்  ஆரோக்கியமான கபாப் தயாரிக்கப்படுகிறது. முழு செய்முறையையும் இங்கே தமிழில் பெற்றுகொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள் 

  • பார்லி - 1 கப் 
  • ஓட்ஸ் பவுடர் - 1 கப் 
  • துருவிய கேரட் - 1 கப் 
  • நறுக்கிய வெங்காயம் - 1 கப் 
  • குடமிளகாய் - 1 கப் 
  • முருங்கைக் கீரை - 1 கப் 
  • மைதா மாவு - தேவையான அளவு 
  • ரஸ்க் பவுடர் - தேவையான அளவு 
  • மிளகாய்த்தூள் - தேவையான அளவு 
  • இஞ்சித் துருவல் - தேவையான அளவு 
  • உப்பு - தேவையான அளவு 
  • எண்ணெய் - தேவையான அளவு  
  • பச்சைமிளகாய் - 1
  • எலுமிச்சை - 1
  • ஐஸ்கிரீம் குச்சிகள் - 10

செய்முறை 

  1. எட்டு மணி நேரம் ஊறிய பார்லியை இஞ்சி, பச்சைமிளகாய், உப்புடன் சேர்த்து அரைக்கவும்.

  2. அத்துடன் ஓட்ஸ் பவுடர், கேரட், வெங்காயம், குடமிளகாய், சுத்தம் செய்த கீரை, மிளகாய்த்தூள், உப்பு எலுமிச்சைச் சாறு சேர்த்துப் பிசைந்து ஓவல் சைசில் செய்து கொள்ளவும்.

  3. மைதா மாவை நீரில் கெட்டியாக கரைத்து காபாப்பைத் தோய்த்து ரஸ்க் பவுடரில் பிரட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும். அதில் ஐஸ்கிரீம் குச்சிகளைக் குத்திப் பரிமாறவும்.     

Post a Comment

0 Comments