Murungai kai Delight Recipe - முருங்கைக்காய் டிலைட் செய்முறை


முருங்கைக்காய் டிலைட் என்பது முருங்கைக்காய் மற்றும் பலவிதமான தானியங்களுடன் செய்யப்பட்ட சுவையான ஓர் உணவாகும். இதற்கன ரெசிபி தமிழில் இங்கே காண்க. 

தேவையான பொருட்கள் 

  • முற்றிய முருங்கைக்காய் - 15
  • உரித்த பச்சைப் பட்டாணி - 1/2  கப் 
  • முளைகட்டிய கொண்டைக்கடலை, பாசிப்பயறு சேர்ந்தது - 1/2 கப் 
  • நறுக்கிய குடமிளகாய் - 1/4 கப் 
  • கடுகு - 1 டீஸ்பூன் 
  • உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன் 
  • கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன் 
  • நறுக்கிய கொத்துமல்லி - தேவைக்கு 
  • உப்பு - தேவைக்கு 
  • எண்ணெய் - தேவைக்கு 

செய்முறை 

  1. முருங்கைக் காயை உரித்து வைத்துக் கொள்ளவும். (வேகவிடக் கூடாது)

  2. காய்ந்த எண்ணெயில் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு தாளித்து, முருங்கை விழுதைப் போட்டு, 5 நிமிடங்கள் வதக்கவும்.

  3. அத்துடன் பச்சைப் பட்டாணி, கொண்டைக் கடலை, பாசிப்பயறு, மிளகாய் போட்டு வதக்கி, பிறகு உப்பு, தேங்காய்த் துருவலைப் போடவும். 

  4. இறக்கிய பின் மல்லித்தழையைத் தூவவும்.   

Post a Comment

0 Comments