Muddai Ma - முட்டை மா


 4 - 5 பேருக்கு போதுமானது 

தேவையான பொருட்கள் 

  • வறுத்த அரிசிமா - 1 சுண்டு (நிரப்பி)
  • முட்டை - 2
  • சீனி - 1/2 சுண்டு 
  • நல்லெண்ணெய் - 1/2 தம்ளர் 
  • வனிலா - 2 மேசைக்கரண்டி 
  • உளுத்தம்மாவு - 1/4 சுண்டு 

செய்முறை 

  1. வாயகன்ற பாத்திரத்தில் முட்டைகளை உடைத்து ஊற்றி சீனியையும் சேர்த்து சீனி நன்கு கரையும்வரை அடித்து வனிலாவையும் சேர்த்துக் கொள்க.

  2. இவ் அடித்த கலவையில் வறுத்த அரிசிமா, உளுத்தம்மா என்பவற்றைச் சிறிது சிறிதாக தூவி சேர்த்து நல்லெண்ணையும் விட்டுக் குழைத்து கொள்க.

  3. தாச்சியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றிச் சட்டி முழுவதும் புரளும் வண்ணம் தாச்சியை சுற்றிக் கொண்ட பின்பு அடுப்பில் வைத்து மாக்கலவையைக் கொட்டி ஒரு கரண்டியால் அடிப்பிடிக்கா வண்ணம் இடைவிடாது கிளறிக் கொண்டிருக்கவும்.

  4. கலவை முற்றாக உதிர்ந்து சிறு மணிகள் போல் ஆகி மண்ணிறத்தை அடைந்ததும் தாச்சியை அடுப்பிலிருந்து இறக்கி நன்கு ஆறிய பின்பு போத்தலில் அடைத்து வைத்துப் பயன்படுத்தலாம்.     

Post a Comment

0 Comments