Milk Toffie - மில்க் ரொபி

 


60 - 80 துண்டுகள் (1 1/2'' x 1 1/2'')

தேவையான பொருட்கள் 

  • கட்டிப்பால் - 1 ரின் (பெரியது) 525 கிராம் 
  • சீனி - 2 சுண்டு (தலைத்தட்டி) / 500 கிராம் 
  • வனிலா - 1 மே.க 
  • ஏலப்பொடி - 1 தே.க (மட்டாக)
  • தண்ணீர் - 1/2 தம்ளர் / 10 மே.க 
  • மாஜரின் - 1 மே. க (நிரப்பி)
  • மாஜரின் - 1 தே.க (நிரப்பி) தட்டிற்குப் பூசுவதற்கு 

செய்முறை 

  1. தாச்சியில் கட்டிப்பால், சீனி, தண்ணீர் மூன்றையும் இட்டுக் கரண்டியால் நன்கு சேர்த்துக் கொள்க.

  2. பின்பு பாத்திரத்தை ஒரே சீராக எரியும் அடுப்பில் வைத்து அடிப்பிடிக்கா வண்ணம் துளாவிக் காய்ச்சவும்.

  3. கலவை தடிக்கத் தொடங்கியதும் 1 மே.க மாஜரின், வனிலா, ஏலப்பொடி என்பன சேர்த்து நன்கு கிளறிக் கலவை திரளத் தொடங்கியதும் அதில் சிறிதளவை எடுத்துக் குளிர்நீர் கொண்ட பாத்திரத்தில் விட்டு சிறிது நேரத்தால் இரு விரல்களால் தொட்டுப்பார்க்கும்போது உருண்டையாகத் திரளும் பதத்தை அடைந்ததும் நெருப்பை நன்கு குறைத்து இறக்கி ஒரு மாஜரின் பூசிய தட்டில் கொட்டிக் கொள்ளவும்.

  4. பின்பு தட்டையான அடிப்பாகமுள்ள பாத்திரத்தை எடுத்து அதன் அடிப்பகுதிக்கு மாஜரின் பூசிக்கொண்டு அப்பாத்திரத்தால் 1'' தடிப்பாக வரும் வண்ணம் பரவி, கூரான கத்தியால் 1 1/2'' x 1 1/2'' அளவான துண்டுகளாகக் கீறிக்கொண்டு நன்கு ஆறியபின் துண்டுகளைப் பிரித்தெடுத்துப் பரிமாறலாம்.

குறிப்பு 

  • மாஜரின் பூசிய தட்டில் கொட்டிப் பரவுவதற்குப் பதிலாக, மாஜரின் பூசிய பலகையில் கலவையைக் கொட்டி மாஜரின் பூசிய உருளையால் 1'' தடிப்பாக வரும் வண்ணம் உருட்டித் துண்டுகளை வெட்டியெடுக்கலாம்.           

Post a Comment

0 Comments