Masmalos - மாஸ்மலோஸ் வகை I

 


45 துண்டுகள் 

தேவையான பொருட்கள் 

  • சீனி - 500 கிராம் 
  • ஜெலற்றீன் - 4 1/2 மே.க (மட்டாக) / 30 கிராம் 
  • வனிலா - 1 மே.க 
  • கலரிங் (விரும்பியது) - 1 தே.க 
  • தண்ணீர் - 1 தம்ளர் 
  • கொதிநீர் - 12 மே.க 
  • சோள மா (Cron flour)  - 2 மே.க (நிரப்பி)
  • மாச்சீனி (Icing Sugar)  - 3 மே.க (நிரப்பி)

செய்முறை 

  1. ஐசிங் சுகரையும் கோன் பிளாவையும் சேர்த்து அரித்து வைத்துக் கொள்க.

  2. ஈரமான தட்டை எடுத்து இவ் ஐசிங் சுகர் கலவையில் அரைவாசியைத் தூவி நன்கு பரவி வைத்துக் கொள்க.

  3. ஜெலாற்றீனைத் தம்ளரில் எடுத்து அதனுள் 12 மே . க கொதிநீர்விட்டு இத் தம்ளரை பிறிதோர் கொதி நீருள்ள பாத்திரத்தில் அமிழ்த்தி வைத்துக் கொண்டு ஜெலற்றீன் முற்றாக கரையும்வரை நன்கு கரைத்துக் கொண்ட பின் இக் கரைசலை ஓர் வாயகன்ற பாத்திரத்தில் ஊற்றிவைத்துக் கொள்க.

  4. தாச்சியில் சீனியையும் ஒரு தம்ளர் தண்ணீரையும் சேர்த்து அடுப்பில் வைத்துக் காய்ச்சுக. பாகு காய்ச்சும்போது சீனி முழுவதும் கரைந்து வெளுவெளுப்பான நுரைப்பதம் தோன்றி மறைந்து பாகு கொதிக்கும் பதத்தை அடைந்ததும் குளிர்நீர் கொண்ட பாத்திரத்தில் சிறிதளவை விட்டுப்பார்க்கும்போது நீரில் கரையாமல் தண்ணீரில் பாகு தெரியும் பதத்தை அடைந்ததும் தாச்சியை உடனே அடுப்பிலிருந்து இறக்கி ஜெலற்றீன் உள்ள பாத்திரத்தில் ஊற்றி ஆறவைக்கவும்.

  5. பின்பு இக் கலவையில் வனிலாவைச் சேர்த்து முட்டையடிகருவியால் (Egg Beater) நன்கு அடித்துக் கொள்க. இதன் பதம் சரியானதாயின் கலவை பால் போன்ற வெண்ணிறத்தை அடைவதுடன் காற்றும் சத்தத்துடன் வெளியேறும். 

  6. பின்பு ஐசிங் சுகர் பரவிய தட்டில் இக்கலவையில் அரைவாசியை ஊற்றி 1/2'' தடிப்பாகப் பரவிக் கொண்ட பின் மிகுதி அரைவாசிக்கும் விரும்பிய வேறு நிறம் சேர்த்து அடித்து மீண்டும் அதன்மேல் ஊற்றிப் பரவி மேலே மிகுதியில் கால்வாசி ஐஸிங்சுகர் கலவையை தூவி 6 மணி நேரம் வைத்துக் கொண்டபின் துண்டுகளாக்கி மிகுதி ஐசிங் சுகர் கலவையில் புரட்டி எடுத்துக் கொண்ட பின்பு பரிமாறலாம்.             

Post a Comment

0 Comments