Kesari - கேசரி

 


25 துண்டுகள் 1 1/2'' X 1 1/2'' - 1'' தடிப்பு 

தேவையான பொருட்கள் 

  • ரவை - 250 கிராம் 
  • சீனி - 250 கிராம் 
  • பால் - 2 தம்ளர் / 1/2 போத்தல் 
  • தண்ணீர் - 1 தம்ளர் 
  • நெய் - 1/8 போத்தல் (அல்லது) 
  •                 மாஜரின் - 150 கிராம் 
  • கேசரிப் பவுடர் - 1 சிட்டிகை 
  • கஜு - 25 பதித் துண்டுகள் 
  • பிளம்ஸ் - 2 மே.க (நிரப்பி)
  • ஏலப்பொடி - 1 தே.க (மட்டாக)
  • உப்புத்தூள் - 1 சிட்டிகை 

செய்முறை  

  1. தாச்சியை அடுப்பில் வைத்து ரவையைப் போட்டு ஓரளவாக வறுத்தெடுத்துக் கொள்ளவும்.

  2. பின்பு அத்தாச்சியினுள் 1 மே.க மாஜரின் அல்லது நெய்யை விட்டு பிளம்ஸைப் பொரித்து வடித்தெடுத்துக் கொள்க.

  3. தாச்சியில் மிகுதியாக உள்ள மாஜரினில் பாலையும் தண்ணீரையும் விட்டுக் கேசரிப் பவுடர், உப்புத்தூள் என்பன சேர்த்து காய்ச்சுக.

  4. பால் கொதிக்கத் தொடங்கியதும் அதனுள் வறுத்த ரவையைச் சிறிது சிறிதாக தூவி முழுவதுமாக நன்கு சேர்த்துக் கொண்டபின் சீனியை சேர்த்துக் கொள்க. சீனி போட்டபின் கலவை இளக்கிக்கொள்ளுமாதலால் கரண்டியால் அடிப்பிடிக்காது நன்கு கிளறி நெய், பிளம்ஸ், ஏலப்பொடி என்பவற்றையும் சேர்த்து கலவை திரண்டு சேரும் பதத்தில் இறக்கிக் கொள்க,

  5. பின்பு மாஜரின் பூசிய தட்டில் இக்கலவையைக் கொட்டி வாழையிலைத் துண்டால் ஒரே சீராகப் பரவி 1 1/2''  X 1 1/2'' அளவுடைய துண்டுகளாக வெட்டிக் கொண்டு ஆறிய பின்பு அத்துண்டின் நடுவே ஓர் பாதிக் கஜுவைப் பதித்துப் பரிமாறலாம்.    

Post a Comment

0 Comments