Kachan alva - கச்சான் அல்வா


 25 துண்டுகள் (1'' X 1'')

தேவையான பொருட்கள் 

  • கச்சான் முத்து - 250 கிராம் 
  • சீனி - 250 கிராம் 
  • அப்பச்சோடா - 2 சிட்டிகை 
  • கோதுமை மாவு - 2 மே.க (நிரப்பி)
  • மாஜரின் - 2 தே.க (நிரப்பி)

செய்முறை 

  1. கச்சான் முத்தை பொன்னிறமாக வறுத்து ஆறிய பின்னர் கசக்கிப் புடைத்து பாதி முத்துக்களாக எடுத்து வைத்துக் கொள்க.

  2. தட்டிற்கு மாஜரின் பூசி வைத்துக் கொள்க.

  3. தாச்சியில் சீனியைப்போட்டு அடுப்பில் வைத்துச் சீனியை இடைவிடாது வறுத்துக் கொண்டிருக்கவும்.

  4. சீனி முழுவதும் இளகிப் பாகாக வரத்தொடங்கியதும் அதனுள் 1 தேக்கரண்டி மாஜரின், அப்பச்சோடா என்பவற்றையிட்டு நன்கு சேர்த்துக்கொள்க.

  5. பின்பு இப் பாகினில் கச்சான் முத்தைச் சிறிது சிறிதாக தூவி முழுவதுமாகச் சேர்த்துக் கொண்டபின் உடனடியாக அடுப்பிலிருந்து இறக்கி தட்டில் கொட்டி ஒரு மாஜரின் பூசிய உருளையினால் நன்கு அழுத்திப் பரவி உடனடியாக ஒரு கூரான கத்தியால் 1''X 1'' அளவான துண்டுகளாகக் கீறிக்கொண்டு நன்கு ஆறிய பின்பு துண்டுகளைப் பிரித்தெடுத்துப் பரிமாறலாம்.


Post a Comment

0 Comments