Jilepi - தேன்குழல் (ஜிலேபி)

 


15 முறுக்குகள் 

தேவையான பொருட்கள் 

  • கோதுமை மாவு - 1 சுண்டு (நிரப்பி)
  • தயிர் - 6 மே.க (நிரப்பி)
  • சிவப்பு கலரிங் - 1 தே.க 
  • தேங்காய் எண்ணெய் - 1/2 போத்தல் 

பாகு தயாரித்தல் 

  • சீனி - 250 கிராம் 
  • தண்ணீர் - 3/4 தம்ளர் 
  • வனிலா - 1 தே.க 
  • சிவப்பு கலரிங் - 1 தே.க 
  • ஸ்ரோபெரி எசன்ஸ் - 2 துளிகள் 

செய்முறை 

  1. மாவை அரித்துப் பிளாஸ்ரிக் பாத்திரத்திலிட்டுத் தயிரும் அளவாகத் தண்ணீரும் விட்டுத் தோசைமாப் பதத்திற்குக் கரைத்து 12 மணிநேரம் வரை புளிக்க வைக்கவும்.

  2. பின்பு தாச்சியில் சீனியைப் போட்டுத் தண்ணீரும் விட்டு அடுப்பில் வைத்துக் காய்ச்சவும்.

  3. பாகு காய்ச்சும் போது முதலில் சீனி முழுவதும் கரைந்து பின்பு வெளுவெளுப்பாக நுரைத்துப் பொங்கி, இந் நுரையடங்கிப் பாகு பொங்கிக் கொதிக்கும் பதத்தை அடைந்ததும் (விரலால் தொட்டுப்பார்க்கும்போது பாகு பிசுபிசுப்பாக கையில் ஓட்டும்) அடுப்பில் இருந்து தாச்சியை இறக்கி வனிலா, கலரிங், எசன்ஸ் என்பவற்றை விட்டு நன்கு கலக்கி வைத்துக் கொள்க.

  4. அடி தட்டையான தாச்சியை அல்லது Frying pan ஐ எடுத்து எண்ணெய் விட்டு நன்கு கொதிக்க வைத்தபின் ஓர் தடித்த துணியில் மாக்கரைசலையூற்றிப் பொட்டலமாக இறுகப் பிடித்துக் கொண்டு பொட்டலத்தின் அடியில் ஓர் துவாரத்தை ஏற்படுத்திய பின் கொதிக்கும் எண்ணெயில் வட்டமாக வரக்கூடியதாகப் பிழிந்து கொள்க.

  5. இவ் வண்ணமே மற்றைய முறுக்குகளையும் ஊற்றிச் சிவக்கப் பொரித்தெடுத்து உடனேயே பாகில் அமிழ்த்தி வைத்து சிறிது நேரத்தின்பின் வடியவிட்டு எடுத்து ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கி வைத்து ஆறிய பின்பு பரிமாறலாம்.      


Post a Comment

0 Comments