Jijips - ஜீஜீப்ஸ் வகை II

 60 - 70 துண்டுகள் 

தேவையான பொருட்கள் 

  • சீனி - 250 கிராம் 
  • ஜெலற்றின் - 25 கிராம் 
  • லிப்குவிட் குளுக்கோஸ்  - 75 கிராம்   
  • சித்திரிக்கமிலம் - 2 கிராம்  / 1/2 தே .க 
  • எசன்ஸ் - 5 துளி 
  • தண்ணீர் -1/2 தம்ளர்(ஜெலற்றின் கரைக்க) 
                           1/2 தம்ளர் (சீனி காய்ச்சுவதற்கு)
  • கலரிங் - 5 துளி 
  • சீனி - 100 கிராம் புரட்டுவதற்கு 



செய்முறை 

  1. ஜெலற்றீனைப் பாத்திரத்திலிட்டு 1/2 கோப்பை கொதிநீர் விட்டு கொதிநீருள்ள பாத்திரத்தில் அமிழ்த்தி வைத்துக் கொண்டு கரைத்துக் கொள்க.

  2. சீனிக்கு 1/2 கோப்பை தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்துச் சூடாக்குக. சீனி முழுவதும் கரைந்ததும் லிக்குவிட் குளுக்கோஸ் இட்டு ஒன்றாகச் சேர்த்து 250F இற்கு வெப்பமாக்கி அடுப்பிலிருந்து இறக்கி உடனேயே சித்திரிக்கமிலமிட்டு கலந்து நன்றாக ஆறவைக்கவும். ஆறிய பின்பே கலரிங், எசன்ஸ் என்பன சேர்த்துக் கொள்க.

  3. பின்பு எண்ணெய் பூசிய அச்சுக்களில் (முட்டை கோஸ் ) ஊற்றி 8 மணிநேரத்திற்குப் பதமாகும் வரை வைத்து கத்தியால் தட்டியெடுத்து சீனியில் புரட்டியெடுத்து அதிகமான சீனியை அகற்றியபின் பொதி செய்க.   

Post a Comment

0 Comments