Javvarisi Masal Vada Recipe - ஜவ்வரிசி மசால் வடை செய்முறை


ஜவ்வரிசி மசாலா வடை ரெசிபி தமிழில். இது தென்னிந்தியாவின் பிரபலமான ஒரு சிற்றுண்டியாகும். இது ஜவ்வரிசி, மசாலா மற்றும் சுவையூட்டிகளை கொண்டு தயாரிக்கக்கூடிய ஓர் சுவையான உணவாகும். 

தேவையான பொருட்கள் 

  • துவரம் பருப்பு - 2 கப் 
  • ஜவ்வரிசி - 1/2 கப் 
  • நறுக்கிய வெங்காயம் - 1 கப் 
  • காய்ந்த மிளகாய் - 4
  • பூண்டு - 5 பல் 
  • இஞ்சி - 1 துண்டு 
  • சோம்பு - 1 டேபிள்ஸ்பூன் 
  • புதினா - தேவைக்கு 
  • கறிவேப்பிலை - தேவைக்கு 
  • உப்பு - தேவைக்கு 
  • எண்ணெய் - தேவைக்கு 

செய்முறை 

  1. பருப்பையும் ஜவ்வரிசியையும் தனித்தனியாக ஊறவைத்து உப்பு, மிளகாயுடன் கரகரப்பாக அரைக்கவும். 

  2. இஞ்சி, பூண்டு நசுக்கிச் சேர்க்கவும்.கறிவேப்பிலை, புதினா, சோம்பு, வெங்காயம் கலக்கவும்.

  3. காய்ந்த எண்ணெயில் வடைகளாகத் தட்டி மிதமான சூட்டில் பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும். 

Post a Comment

0 Comments