Thothal - தொதல்

 


40 துண்டுகள்

தேவையான பொருட்கள் 

  • அரிசிமா - 2  சுண்டு (1 சுண்டு  அரிசியில் இடித்தமா )
  • சீனி - 500 கிராம் 
  • சர்க்கரை - 500 கிராம்  
  • தேங்காய் - 4
  • சவ்வரிசி - 50 கிராம் 
  • ஏலப்பொடி - 1 தே. க( நிரப்பி)
  • தண்ணீர் - 9 தம்ளர் 
  • உப்புத்தூள் - 2 சிட்டிகை 
  • வறுத்த பயறு - 50கிராம் 
  • வறுத்த கச்சான் முத்து - 100கிராம் 

செய்முறை 

  1. ஒரு சுண்டு அரிசியை 3 மணி நேரம் ஊறவைத்து, இடித்து அரித்து இரண்டு சுண்டு மாவை எடுத்துக் கொள்க.

  2.  துருவி, பெரிய பாத்திரத்திலிட்டு 9 தம்ளர் தண்ணீரில் அளவளவாகத் தண்ணீர் விட்டு பிழிந்து 4 தம்ளர் முதல் பாலும், 6 தம்ளர் இரண்டாம், மூன்றாம் பாலும் எடுத்து வைத்துக் கொள்க.

  3. பின்பு 6 தம்ளர் இரண்டாம், மூன்றாம் பாலில் சர்க்கரை, சீனி, அரிசிமா, உப்புத்தூள் என்பவற்றைப் போட்டு சர்க்கரை நன்கு கரையும் வரை கரைத்துக் கொள்க.(சர்க்கரையைச் சீவிப் பாலில் கரைத்து வடிகட்டிய பின், மாவையும் சீனியையும் போட்டுக் கரைத்தல் சிறந்ததாகும்.)

  4. பின்பு இக்கலவையை அடுப்பில் வைத்து, இடைவிடாது காய்ச்சிக் கொண்டிருக்கவும், காய்ச்சும் பொது கலவை ஓரளவு தடித்து சட்டியில் ஒட்டும் பதத்தை அடையத் தொடங்கியதும் முதற் பாலை விட்டுக் கரண்டியால் அடிப்பிடிக்கா வண்ணம் இடைவிடாது கிளறிக் கலவை முழுவதுமாகத் திரளத் தொடங்கும்போது ஏலப்பொடி, சவ்வரிசி, பயறு, கச்சான் என்பவற்றை போட்டு சேர்த்துக் எண்ணெய் மிகுதியாக பெருகுமாயின் கரண்டியால் இயலுமான அளவை அள்ளியெடுத்த பின்பு தாச்சியை அடுப்பில் இருந்து இறக்கிக் கொள்க.

  5. பின்பு சதுர வடிவான தட்டினில், இக்கலவையைக் கொட்டி, தட்டையான அடிப்பகமுள்ள பாத்திரத்திலிட்டு 2'' தடிப்பாக இருக்கும் வண்ணம் அழுத்திப் பரவி 2'' x 2'' அளவான துண்டுகளாக வெட்டிக் கொள்க.    

Post a Comment

0 Comments