Ellurandai - எள்ளுருண்டை வகை I


 25 - 30 உருண்டைகள் 

தேவையான பொருட்கள் 

  • எள்ளு - 250 கிராம் 
  • சீனி - 200 கிராம் 
  • அப்பச்சோடா - 1 சிட்டிகை 
  • மாஜரின் - 2 தே . க (நிரப்பி)

செய்முறை 

  1. எள்ளைக் கழுவிக் களைந்து விளக்கித் துப்பரவாக்கிக் காயவைத்து புடைத்து வைத்துக் கொள்க.

  2. தாச்சியை அடுப்பில் வைத்துச் சூடான பின்பு எள்ளையிட்டுப் பொன்னிறமாக வறுத்தெடுத்துக் கொள்க.

  3. தாச்சியில் சீனியைப் போட்டு அடுப்பில் வைத்துச் சீனியை வறுத்துக் கொண்டிருக்கவும்.

  4. சீனி முழுவதும் இளகிப் பாகாக வரத்தொடங்கியதும் அதனுள் 1 தே.க மாஜரின், அப்பச்சோடா என்பவற்றையிட்டு நன்கு சேர்த்துக் கொள்க.

  5. பின்பு இப் பாகினில் வறுத்து வைத்துள்ள எள்ளைச் சிறிது சிறிதாக தூவி முழுவதுமாகச் சேர்த்து உடனடியாக அடுப்பிலிருந்து இறக்கி பிறிதொரு ஈரமற்ற பாத்திரத்தில் போட்டுக் கொண்டு கையிற்கு சிறிதாவு மாஜரின் பூசிச் சூட்டுடனேயே பாக்களவு உருண்டைகளாகப் பிடித்து இரண்டு உள்ளங் கைகளுக்கும் இடையே வைத்து உருட்டிக் கொள்க.  

Post a Comment

0 Comments