Coconut paav - கோக்கனற் பாவ்

 


25 துண்டுகள் (1'' X 1'')

தேவையான பொருட்கள் 

  • வறுத்த தேங்காய்ப்பூ - 10 மே .க (நிரப்பி)
  • பசும்பால் - 1 தம்ளர் 
  • பால்மா (லக்ஸ்பிறே) - 4 மே .க (நிரப்பி)
  • வறுத்து துப்பரவாக்கிய கச்சான்முத்து - 4 மே .க (நிரப்பி)
  • சீனி - 350 கிராம் 
  • சிறிதாக ஒடித்த கறுவா - 1 மே .க (நிரப்பி)
  • கலரிங் - 1 தே .க (மட்டாக)
  • மாஜரின் - 1 மே .க (நிரப்பி)

செய்முறை 

  1. தாச்சியில் மாஜரினை உருகவிட்டு வறுத்துத் துப்பரவாக்கிய கச்சான் முத்தைப் போட்டுப் பொன்னிறமாக பொரித்து அப்படியே மஜாரினுடன் சேர்த்து வேறோர் பாத்திரத்தில் எடுத்துவைத்துக் கொள்க.

  2. பின்பு பசுப்பாலில் பால்மாவைக் கட்டிபடாமல் நன்கு கரைத்து சீனியும் சேர்த்து அடுப்பில் வைத்துக் கலவை தடித்து வரும்வரை இடைவிடாது கரண்டியால் துழாவிக் காய்ச்சுக.

  3. கலவை நன்கு தடிக்கத் தொடங்கியதும் மாஜரினையிட்டுச் சேர்த்துக் கொண்டபின் கறுவாத்துள், பொரித்தெடுத்த கச்சான் முத்து, பொன்னிறமாக வறுத்த தேங்காய்ப்பூ என்பவற்றையும் சேர்த்து இடைவிடாது கிளறிக் கலவை சட்டியில் ஓட்டாது திரளும் பதத்தை அடைந்ததும் கலரிங்கும் சேர்த்து இறக்கிக் கொள்க.

  4. பின்பு மாஜரின் பூசிய தட்டில் இக் கலவையைக் கொட்டி மாஜரின் பூசிய வாழையிலைத் துண்டால் நன்கு அழுத்தி 1'' தடிப்பாகப் பரவி 1'' X 1'' அளவு கொண்ட சதுரத் துண்டுகளாக வெட்டிக்கொண்டு மூன்று மணி நேரத்தின்பின் ஒவ்வொரு  துண்டுகளாகப் பிரித்தெடுத்து பக்கம் மாற்றி வேறோர் தட்டில் அடுக்கிவைத்து 3 மணி நேரம் உலரவைத்தபின் பரிமாறலாம்.


Post a Comment

0 Comments