Apple Sweets - அப்பிள் சுவீட்


 50 அப்பிள் சுவீட் 

தேவையான பொருட்கள் 

  • பால்மா - 200 கிராம் 
  • சீனி  - 125 கிராம் / 6 மே .க (நிரப்பி)
  • மாஜரின் - 1 மே .க (நிரப்பி) 
  • தேங்காய்ப்பூ - 3 மே .க (நிரப்பி)
  • தண்ணீர் - 5 மே .க 
  • கராம்பு - 50 
  • வனிலா - 1 மே .க 
  • பச்சைக் கலரிங் - 1 தே .க 
  • ஏலப்பொடி - 1 தே .க (மட்டாக)

செய்முறை  

  1. பால்மாவை உலர்ந்த பாத்திரத்திலிட்டு தேங்காய்ப்பூவும் சேர்த்து நன்கு கலந்து வைத்துக்கொள்க.

  2. கராம்பைக் கழுவிக் காயவைத்து எடுத்துக் கொள்க.

  3. தாச்சியை அடுப்பில் வைத்துச் சீனியிட்டு 6 மேசைக்கரண்டி தண்ணீர் விட்டுக் காய்ச்சுக. பாகு காய்ச்சும்போது முதலில் சீனி முழுவதும் கரைந்து வெளுவெளுப்பான நுரைப்பதம் தோன்றி மறைந்து பாகு பொங்கிக் கொதித்துத் தடிக்கத் தொடங்கியதும் மாஜரினை அதனுள் போட்டு உருக விடவும்.

  4. மாஜரின் உருகியதும் பால்மா , தேங்காய்ப்பூ கலந்து வைத்துள்ள கலவையைக் கொட்டி கரண்டியால் அடிப்பிடிக்காவண்ணம் இடைவிடாது கிளறி கலவை திரளத் தொடங்கியதும் வனிலா , ஏலப்பொடி , கலரிங் என்பன சேர்த்துக் கலந்து இறக்கிக் கொள்க.
  5. கலவை சூட்டுடன் இருக்கும் போதே கைகளிற்கு மாஜரின் பூசிக்கொண்டு நெல்லிக்காயளவு உருண்டைகளாக உருட்டிக் கொண்டு கராம்பை காம்போடு எடுத்து நடுவே குற்றிக்கொள்க.  


Post a Comment

0 Comments