Mulai keerai Cutlet recipe - முளைக்கீரை கட்லெட் செய்வது எப்படி?


மிருதுவான முளைக்கீரை கட்லெட்  சிற்றுண்டி செய்முறை தமிழில். இது முளை கீரையை பயன்படுத்தி தயாரிக்கப்படக்கூடிய ஓர் சுவையான மற்றும் ஆரோக்கியமான ஓர் சிற்றுண்டியாகும்.  

தேவையான பொருட்கள் 

  • முளைக்கீரை - 1 கட்டு 
  • பெரிய வெங்காயம் - 2 
  • கடலைப்பருப்பு - 200 கிராம் 
  • பச்சைமிளகாய் - 4
  • பிரட் ஸ்லைஸ் - 5 
  • சோள மாவு - 3 டேபிள்ஸ்பூண் 
  • இஞ்சி - 1 துண்டு 
  • உப்பு - தேவைக்கு 
  • எண்ணெய் - தேவைக்கு 

செய்முறை 

  1. ஒரு மணி நேரம் ஊறிய பருப்பை மிளகாய், இஞ்சி, உப்புடன் அரைக்கவும்.

  2. தண்டில்லாமல் கீரையை மட்டும் எடுத்து சுத்தம் செய்து நீரில் வேகவிடவும்.

  3. அரைத்த பருப்பு, வெந்த கீரை, வெங்காயம், பிரட் வில்லைகள் எல்லாவற்றையும் ஒன்றாக்கி நன்கு பிசையவும்.

  4. தேவைக்கு சோள மாவைத் தொட்டுக்கொண்டு உருண்டைகளை வடைகளாகப் பரத்தி தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் ஊற்றி இருபுறமும் பொன்னிறத்தில் வேகவிட்டு எடுக்கவும்.  

Post a Comment

0 Comments