Yellow Rice Recipe - மஞ்சள் சோறு


மஞ்சள் சோறு/ எல்லோ ரைஸ் இலங்கைக்கு உரித்தான ஒரு பிரபலமான உணவாகும். மிகவும் எளிதாக தயாரிக்க கூடிய மஞ்சள் சோற்றுக்கான செய்முறை தமிழில் உங்களுக்காக!

4 பேருக்கு போதுமான மஞ்சட் சோறு தயாரிப்பது எப்படி ?

 தேவையான பொருட்கள்  

  • சம்பா அரிசி - 500 கிராம் 
  • தேங்காய் - பாதி 
  • மாஜரின் - 50 கிராம் / 2 மே.க (நிரப்பி)
  • உப்புத்தூள் - 1 தே.க.(மட்டமாக)
  • றம்பை (2'' துண்டு) - 3
  • சிறிதாக வெட்டிய வெங்காயம் - 4 மே.க (நிரப்பி)
  • சிறிதாக வெட்டிய கறிவேப்பிலை - 1 மே.க (நிரப்பி)
  • அவித்த பச்சை பட்டாணி -100 கிராம் 
  • பொரித்த பப்படம் - 8
  • கராம்பு - 10
  • கறுவா (2'' நீளம்) - 10 துண்டுகள் 
  • ஏலம் - 10
  • மிளகு - 15
  • உள்ளி - 3 பல்லு 
  • மஞ்சள்தூள் - 1 தே.க(நிரப்பி)

செய்முறை 

  1. கராம்பு,கறுவா,ஏலம்,மிளகு,உள்ளி என்பவற்றைச் சேர்த்து இடித்தெடுத்து ஒரு மெல்லிய துணியில் பொட்டலமாகக் கட்டிக்கொள்க.
  2. தேங்காயைத் துருவி தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து விட்டு 3 தடவை பிழிந்து 4 1/2 சுண்டு பால் எடுத்துக்கொள்க.
  3. பின்பு தாச்சியில் மாஜரினை காயவிட்டு,வெட்டிய வெங்காயம், கறிவேப்பிலை, றம்பை என்பவற்றையிட்டு  வதக்கிய பின் இறக்கி கொள்ளவும்.
  4. தேங்காய்ப்பாலை ஒரு பானையில் ஊற்றி கொதிக்க வைத்து அதனுள் மச்சாள்த்தூள்,உப்புத்தூள், என்பவற்றைச் சேர்த்துக் கொண்ட பின் அரிசியை கழுவிப்போட்டு,கட்டிவைத்துள்ள பொட்டலத்தையும் அதனுளிட்டு மூடி அவியவிடவும்.
  5. பால் வற்றி அரிசி மட்டத்திற்கு வந்தவுடன் பொட்டலத்தை எடுத்து விட்டு அடுப்பை நன்றாகக் குறைத்து,சோற்றின் நீர் முற்றாக வற்றிப் புழுங்க தொடங்கியதும் இறக்கி ஒரு பெரிய பாத்திரத்தில் கொட்டி ஆறவிட்டு,அவித்து வைத்துள்ள பச்சை பட்டாணிக் கடலையிட்டுக் கலந்து கொள்க.
  6. மஞ்சட் சோற்றைப் பரிமாறும்போது பப்படத்தை பொரித்து சிறு துண்டுகளாக உடைத்து சோற்றின் மேல் தூவிக்கொள்க.உருளைக்கிழங்கு மசாலாக்கறி,இறைச்சி புரட்டல் கறி என்பவற்றுடன் பரிமாறலாம்.     

Post a Comment

0 Comments