Homemade Vegetable Soup Recipe- மரக்கறி சூப்

மரக்கறி சூப் ரெசிபி தமிழில். இது சத்தான காய்கறிகளுடன் கூடிய ஓர் சுவையான மற்றும் எளிதாக தயாரிக்க கூடிய ஓர் ரெசிபியாகும். இந்த ஆரோக்கியமான சமையல் ரெசிபியை தமிழில் இங்கு பெற்றுக்கொள்ளுங்கள்.

 8 - 10 தம்ளர் 

தேவையான பொருட்கள் 

  • வெங்காயம் - 100 கிராம் 
  • கரட் - 100 கிராம் 
  • கோவா - 100 கிராம் 
  • லீக்ஸ் - 100 கிராம் 
  • தக்காளிப்பழம் - 100 கிராம் 
  • உருளைக்கிழங்கு - 100 கிராம் 
  • பருப்பு - 100 கிராம் 
  • கறிவேப்பிலை - 1 நெட்டு 
  • உள்ளி - 5 பல்லு 
  • மிளகுதூள் - அளவிற்கு 
  • உப்புத்தூள் - அளவிற்கு 
  • தேசிப்பழம் - 1
  • தண்ணீர் - 12 தம்ளர் (3 போத்தல் )
  • சிக்கின் கியூப் - 2 கட்டி (விரும்பினால் )

செய்முறை

  1. மரக்கறி வகைகள், உள்ளி, வெங்காயம் என்பவற்றைத் துப்பரவாக்கிக் கழுவிச் சிறு சிறு துண்டுகளாக வெட்டிவைத்துக் கொள்க.

  2. பின்பு பாத்திரத்தில் 12 தம்ளர் தண்ணீரை விட்டு வெட்டி வைத்துள்ள மரக்கறி வகைகள், கறிவேப்பிலை, கழுவிய பருப்பு என்பவற்றையிட்டு மூடி அவியவிடவும்.

  3. மரக்கறிவகை நன்றாக அவிந்த பின்பு சிக்கின் கியூப், உப்பு என்பவற்றை அளவிற்குச் சேர்த்து நன்றாக மசித்துக்கொண்ட பின்பு, சூப்பை வடித்தெடுத்து மிளகுதூள், தேசிப்புளி என்பவற்றையிட்டுக் கலந்து சூட்டுடனேயே பரிமாறலாம். 


Post a Comment

0 Comments