Veg Sandwich - Tamil Recipe - சுவையான veg சான்ட்விச்


எளிய பொருட்களைப் பயன்படுத்தி சுவையான வெஜிடபிள் சாண்ட்விச் உங்கள் வீட்டிலேயே  தயாரிக்கலாம். இந்த எளிதான வெஜிடபிள் சாண்ட்விச் செய்வதற்கன செய்முறை தமிழில் பெற்றுக்கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்

  • பாண் : 1
  • கரட் : 100 கிராம் 
  • பீற்றுட் : 100 கிராம் 
  • உருளைக்கிழங்கு : 200 கிராம் 
  • உப்புத்தூள் : அளவிற்கு 
  • மிளகுத்தூள் : அளவிற்கு 
  • மாஜரீன் : 100 கிராம் 
  • பச்சைகலரிங் : 1 தேக்கரண்டி 

செய்முறை 
  1. பாணின் கரைப்பகுதிகளை நீக்கிவிட்டு, நடுப்பகுதியை மட்டும் 12 சம துண்டுகளாக வெட்டி எடுத்துக்கொள்ளுங்கள். 
  2. பீற்றூட், கரட், உருளைக்கிழங்கை தோல் நீக்கி, சுத்தம் செய்து கழுவி, தனித்தனியாக அவித்து எடுத்துக்கொள்ளுங்கள்.
  3. பின் பீற்றூட்டை தனியாக எடுத்து ஸ்கிறேப்பரில் துருவி நீரை வடிகட்டிய பின்னர் அதனுள் ஒரு தேக்கரண்டி மாஜரின், உப்புத்தூள், மிளகுத்தூள் என்பவற்றை தேவையான அளவு சேர்த்துக்கொள்ளவும்.
  4. அதுபோன்றே காரட்டையும் தனியாக துருவி நீரை வடிகட்டிய பின்னர் 1 தேக்கரண்டி மாஜரீன், உப்புதூள், மிளகுத்தூள் சேர்த்துக்கொள்ளவும்.
  5. உருளைக்கிழங்கை வேறொரு பாத்திரத்தில் மசித்து இடியப்ப உரலில் பிழிந்தெடுத்து அதற்கும் ஒரு தேக்கரண்டி மாஜரீன், உப்புத்தூள், மிளகுத்தூள் பச்சைக்கலரிங் தேவையான அளவு சேர்த்து வைத்துக்கொள்ளுங்கள்.
  6. பின் மீதமுள்ள மாஜரீனை பாண் துண்டுகளின் ஒரு பக்கத்திற்கு மாத்திரம் பூசிக்கொள்ளவும்.
  7. இறுதியாக மாஜரீன் பூசிய 6 பாண் துண்டுகளை எடுத்து ஒவ்வொரு பாண் துண்டிற்கும் முதலில் பரவலாக உருளைக்கிழங்குக் கலவையையும், அதன் மேலே பரவலாக பீற்றூட் கலவையையும் பூசி, வேறொரு பாண் துண்டினால் மூடி அழுத்தி இரண்டு துண்டுகளாக வெட்டிக்கொள்ளுங்கள், இப்போது சுவையான சான்ட்விச் உண்ணுவதற்கு தயாராகிவிட்டது. 


Post a Comment

0 Comments