White Hoppers Recipe Tamil - சுவையான வெள்ளை அப்பம் செய்வது எப்படி

வெள்ளை அப்பம் இலங்கையில் பிரபலமான ஒரு காலை உணவு. அரிசிமா மற்றும் தேங்காய் பால் ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்படும் இவ் அப்பத்தை மிகவும் எளிதாக வீட்டலில் தயாரிக்கலாம். செய்முறையை இங்கே பெறுங்கள்!

15 - 20 அப்பங்கள் செய்வதட்கு 

தேவையான பொருட்கள்

  1. வறுத்து அரித்த வெள்ளையரிசிமாவு : 1 சுண்டு (நிரப்பி)
  2. பெரிய தேங்காய் : 1
  3. இளநீர் : 1 தம்ளர்
  4. ஈஸ்ற் 1 தே. க. (மட்டமாக அல்லது கள்ளு 4 மே. க)
  5. சீனி 1 தே. க. (நிரப்பி)
  6. சூடுநீர் 2 மே. க.
  7. உப்புநீர் அளவிற்கு
  8. தேங்காயெண்ணெய்  2 மே. க

செய்முறை

  1. பாத்திரத்தில், ஈஸ்டையும் சீனியையுமிட்டு, 2 மேசைக்கரண்டி சுடுநீர் (நகச்சூடானது) விட்டு மூடி, நொதிப்பதற்காக 1/2 மணி நேரம் வரை வைத்துக் கொள்க. அல்லது இக் கலவைக்குப் பதிலாகக் கள்ளைப் பாவிக்கலாம்.
  2. வெள்ளையரிசிமாவை நான்கு முறை நன்றாக அரித்துக் கொள்க அரித்தமாவைப் பாத்திரத்தில் போட்டு, ஈஸ்ட் கரைசல் அல்லது கள்ளு, இளநீர் என்பவற்றை விட்டு நன்கு சேர்த்துக் கொண்டபின், அளவாகத் தண்ணீர் விட்டு இடியப்பமாப் பதத்திற்கு அடித்துக் குழைத்துக்கொண்டு ஓரளவான உருண்டைகளாக உருட்டிப் பாத்திரத்திலிட்டு மூடி, 12 மணிநேரம் வரை புளிக்க வைத்துக் கொள்க.
  3. பின்பு தேங்காயைத் துருவிச் சிறிது சிறிதாகத் தண்ணீர்விட்டுப் பிழிந்து 3 தம்ளர் பாலை எடுத்துக்கொள்க.
  4. பின்பு புளிக்க வைத்துள்ள மா உருண்டைகள் வைத்துள்ள பாத்திரத்தை எடுத்து, அதனுள் தேங்காய்ப் பாலைச் சிறிது சிறிதாக விட்டு அளவிற்கு உப்புநீரும் சேர்த்து, ஓரளவு நீர்ப் பதமாகக் கரைத்து வைத்துக் கொள்க.
  5. அப்பம் சுடுவதற்கேற்ற சிறிய தாச்சியை அடுப்பில் வைத்து எண்ணெய் பூசிக்கொண்டபின் 1 கரண்டியளவு (Desserts Spoon) மாவை ஊற்றி, தாச்சியைத் தூக்கி ஒருமுறை சுற்றிக் கொண்டபின் ஒரு மூடியால் சிறிது நேரம் முடிவைத்து வெந்தபின்பு எடுத்துப் பரிமாறலாம்.

Post a Comment

0 Comments