Easy Sponge Cake Recipe - ஸ்பான்ச் கேக்


மிருதுவான வெனிலா ஸ்பான்ச் கேக் செய்முறை தமிழில்! இந்த இலகுவான பஞ்சு போன்ற மிருதுவான ஸ்பான்ச் கேக் வீட்டில் எளிதாக எப்படி தயாரிப்பது  என்பதை அறிந்து கொள்ளுங்கள்!

 25 துண்டுகள் 

தேவையான பொருட்கள் 

  • முட்டை - 4
  • சீனி - 125 கிராம் 
  • கோதுமை மாவு - 125 கிராம் 
  • பேக்கிங் பவுடர் - 1 தே. க (நிரப்பி)
  • தேசிப்புளி - 1 தே. க 
  • வனிலா - 1மே. க 
  • சிறிதாக  கஜீ  - 25 கிராம் 

 செய்முறை 

  1. மாவுடன் பேக்கிங் பவுடர் கலந்து ஆறு முறை அரித்து வைத்துக் கொள்க.

  2. சீனியை இடித்து அரித்துக் கொள்க.

  3. முட்டைகளை உடைத்து வெண்கரு வேறாகவும்   மஞ்சட்கரு வேறாகவும் பிரித்துப் பாத்திரங்களில் எடுத்துக் கொள்க.

  4. பின்பு முட்டையின் வெண்கருவை நன்றாக நுரைபொங்கும் வண்ணம் அடித்து, நுரை நன்றாகத் தடித்த பின்பு சீனி, வனிலா, தேசிப்புளி என்பவற்றைச் சேர்த்துக்  சீனி கரையும்வரை நன்றாக அடித்துக் கொண்ட பின்பு முட்டையின்  மஞ்சட் கருவையும் சேர்த்து அடித்துக் கொள்க.    

  5. பின்பு அடித்த கலவையில், அரித்து வைத்துள்ள மாவைச் சிறிது சிறிதாகத் தூவிக் கஜீவும் சேர்த்துக் கொண்ட பின்பு  ஓயில் பேப்பர் பரவி மாஜரின் பூசிய கேக் தட்டில் அல்லது கேக் கிண்ணங்களில் ஊற்றி பேக் செய்து ஆறிய பின்பு பரிமாறலாம்.

குறிப்பு 

**குழந்தைகள், நோயளர்கள், வயோதிபர்கள் போன்றோருக்கு இலகுவில் ஜீரணிக்கக் கூடிய சிறந்த உணவாகும்.

Post a Comment

0 Comments