Special Pittu Recipe - ஸ்பெஷல் பிட்டு

 

 
சுவையான ஸ்பெஷல் புட்டு ரெசிபி தமிழில். புட்டு அரிசி மாவு மற்றும் தேங்காய் ஆகியவற்றை பயன்படுத்தி வேகவைத்து தயாரிக்கூடிய ஓர் இலங்கை உணவாகும். புட்டை மேலும் ருசியாக்க இந்த ரெசிபியை முயற்சி செய்யுங்கள்.

3 பேருக்கு போதுமான சுவையான ஸ்பெஷல் பிட்டு 

தேவையான பொருட்கள் 

  • வறுத்த அரிசி மாவு - 1 சுண்டு (நிரப்பி)
  • அவித்த கோதுமை மாவு - 1 சுண்டு(நிரப்பி)
  • கரட் - 125 கிராம் 
  • போஞ்சி - 125கிராம் 
  • உருளைக்கிழங்கு - 250 கிராம் 
  • டின் மீன் - 1 டின் (சிறியது)
  • தேங்காய்ப்பூ - 4 மே.க (நிரப்பி)
  • முட்டை - 2 
  • இறால் - 250 கிராம் 
  • மாஜரின் - 3 தே.க(நிரப்பி)
  • சிறிதாக வெட்டிய வெங்காயம் - 4 மே.க (நிரப்பி)
  • சிறிதாக வெட்டிய பச்சைமிளகாய் - 2 மே.க (நிரப்பி)
  • மிளகுத்தூள் - அளவிற்கு
  • உப்புத்தூள் - அளவிற்கு
  • தேங்காய்யெண்னை  - 1/4 போத்தல்
  • உப்புநீர் - அளவிற்கு 
  • கறிமிளகாய்த்தூள் - 2தே. க (மட்டமாக)

செய்முறை 

  1. கரட், போஞ்சி, உருளைக்கிழங்கு என்பவற்றைத் துப்பரவாக்கிக் கழுவிச் சிறு சிறு துண்டுகளாக வெட்டி அளவிற்கு உப்புத்தூளைச் சேர்த்துப் புரட்டி வைத்துக் கொள்க.
  2. இறாலைத் துப்பரவாக்கிக் கழுவிச் சிறிதளவு உப்புத்தூள், 1 தே.க கறித்தூள் என்பவற்றைப் புரட்டிப் பொறித்துக் கொள்க.
  3. பின்பு தாச்சியில் 1 தே.க மாஜரீனையிட்டு காயவைத்து அதனுள் வெட்டிய மரக்கறி வகைகளைப் போட்டு மூடி வதங்கவிட்டு முக்கால்பதமாக வதங்கியதும் மிளகுத்தூள் அளவிற்கு சேர்த்து மூடி வதங்க விட்டு இறக்கி வைத்துக் கொள்க.  
  4. பின்பு பிறிதொரு தாச்சியில் 1தே.க மாஜரீனையிட்டுக் காயவைத்து அதனுள் 2 மே .க வெட்டிய வெங்காயம், 1 மே.க வெட்டிய பச்சை மிளகாய் என்பவற்றைப்  போட்டு வதங்கவிட்டு வதங்கிய பின்பு அதனுள் டின் மீனையும், தேங்காய்ப்பூவையும் 1தே.க கறிமிளகாய்த்தூளையும் சேர்த்துப் பிசைந்த கலவையைக் கொட்டி, அளவிற்கு உப்புத்தூள் சேர்த்து வறுத்து ஈரம் நன்கு சுண்டிய பின்பு இறக்கிக் கொள்க.
  5. தாச்சியில் 1தே.க மாஜரீனைக் காயவைத்து 2 மே.க வெங்காயம், 1 மே.க பச்சைமிளகாய் என்பவற்றைப் போட்டு வதக்கி அதனுள் 2 முட்டைகளை உடைத்து விட்டு உப்புத்தூள், மிளகுத்தூள் சேர்த்து முள்ளுக்கரண்டியால் கிளறி வறுத்து ஈரம் சுண்டியதும் இறக்கிக் கொள்க.
  6. அரிசிமா, கோதுமைமா என்பவற்றை அரித்துப் பாத்திரத்தில் போட்டு அளவிற்கு உப்புநீர் விட்டுச் சேர்த்து நன்கு பொங்கிக் கொதித்த நீர்விட்டுக் குழைத்துச் சிறு மணிகள் போல் பிட்டைக்கொத்தி அவித்தெடுத்துப் பிட்டைப் பெரிய பாத்திரத்தில் போட்டு மரக்கறிவகை, மீன் வறுவல், முட்டைவறை, இறால்ப் பொரியல் என்பவற்றைச் சேர்த்துக் கிளறிப் பரிமாறலாம்.     

    

    

     

Post a Comment

0 Comments