Special Kavaai Rice - ஸ்பெஷல் கவாய் றைஸ்

 


ஸ்பெஷல் கவாய் ரைஸ் ரெசிபி தமிழில். கவாய் ரைஸ் வீட்டில் கிடைக்க கூடிய எளிய சமையலறை பொருட்களால் தயாரிக்க கூடிய ஓர் சுவையான உணவு . இன்றே உங்கள் வீட்டில் இதை செய்து சுவையுங்கள்.

3 பேருக்கு போதுமான சுவையான கவாய் ரைஸ் 

தேவையான பொருட்கள் 

  • சம்பா அரிசி - 1 சுண்டு 
  • இறைச்சி- 500கிராம் 
  • உள்ளி - 3 பல்லு 
  • இஞ்சி - 1 துண்டு 
  • வெங்காயம் - 250கிராம் 
  • கறிமிளகாய் - 4
  • தக்காளிப்பழம் - 2பழம் 
  • வினாகிரி - 1 மே .க
  • கோன் பிளா - 1 மே .க (நிரப்பி)
  • தண்ணீர் - 1/2 தம்ளர் 
  • ரம்பை - 3துண்டு 
  • கறிவேப்பிலை - 1 நெட்டு 
  • மாஜரின் - 50 கிராம்
  • சிறிதாக வெட்டிய அன்னாசிப்பழத் துண்டு - 5 மே .க 
  • உப்பு -  அளவிற்கு
  • மிளகு தூள் - அளவிற்கு
  • சிலி சோஸ் - 1 தே. க 

செய்முறை      

  1. 1 சுண்டு அரிசியில் சோறு சமைத்து பாத்திரத்திலிட்டு பரவி ஆறவைத்துக் கொள்க. 

  2. இறைச்சிக்கு வினாகிரி புரட்டி 1 மணிநேரம் ஊறவைத்த பின்பு உப்பிட்டு அவித்துச் சிறு துண்டுகளாக வெட்டிக் அரைத்து சில்லி சோஸ் விட்டுக்  கலந்து  கொள்க.

  3. தக்காளிப்பழம், கறிமிளகாய், வெங்காயம் என்பவற்றைத்  துப்பரவு செய்து கழுவிச் சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்க.

  4. உள்ளி, இஞ்சி என்பவற்றை சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்க.

  5. தாச்சியை அடுப்பில் வைத்து மாஜரீனிட்டு உருகியதும் வெட்டிய வெங்காயம், கறிமிளகாய் என்பவற்றையிட்டு வதங்கவிட்டு அரைப்பதமாக வதங்கியவுடன் கறிவேப்பிலை, ரம்பை, உள்ளி, இஞ்சி, தக்காளிப்பழம், அன்னாசி என்பற்றையிட்டு வதங்கியதும், அரைத்த இறைச்சியிட்டு,உப்புத்தூள் மிளகுத்தூள் என்பவற்றை அளவிற்கு சேர்த்துக் கொண்டபின்பு 1/2 தம்ளர் தண்ணீரில் கரைத்த கோன்பிளா கரைசலை ஊற்றி நன்றாகக் கலந்து அதனுள் அறவைத்துள்ள சோற்றைக் கொட்டி சேர்த்து இறக்கிக் கொள்க.  

Post a Comment

0 Comments