Healthy Soya Roti Recipe - சோயா ரொட்டி


புரோட்டீன் சத்து நிரம்பிய சோயா ரொட்டி ரெசிபி தமிழில். அரிசி மாவு மற்றும் சோயா மாவினால் தயாரிக்கப்பட கூடிய அதிக நார்ச்சத்து, புரதம் நிரம்பிய ஓர் ஆரோக்கியமான உணவாகும்.

15ரொட்டிகள் 

தேவையான பொருட்கள் 

  • சோயா மா - 1/2 சுண்டு 
  • புலுங்கலரிசி மா - 1/4 சுண்டு 
  • கடலை மா - 1/4 சுண்டு 
  • கரட் - 100கிராம் 
  • லீக்ஸ் - 100கிராம் 
  • சி.வெ.பச்சைமிளகாய் - 2 மே.க 
  • உப்புத்தூள் - அளவிற்கு
  • மிளகுத்தூள் - அளவிற்கு
  • நெய் - 2 மே .க 
  • தண்ணீர் - அளவிற்கு

செய்முறை 

  1. கரட்டைத் துப்பரவு செய்து ஸ்கிரேப்பரில் துருவி எடுத்துக் கொள்க.
  2. லீட்சை துப்பரவு செய்து சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்க.
  3. சோயா மா, புலுங்கலரிசி மா, கடலை மா என்பவற்றை அரித்துப் பாத்திரத்தில் இட்டு , வெட்டிய கரட், லீற்ஸ், பச்சைமிளகாய், உப்புத்தூள், மிளகுத்தூள், நெய் என்பன இட்டு நன்கு கலந்து கொண்ட பின்பு,தண்ணீரை அளவிற்கு விட்டு ரொட்டி மாப்பததிற்குக் குழைத்துப் பொலீத்தின் காகிதத்தில் வைத்து ரொட்டிகளாகத்  தட்டி எண்ணெய் பூசிய தோசைக் கல்லிலிட்டு வாட்டிக் கொள்க.

      

Post a Comment

0 Comments