Healthy Samaposha Roti Recipe - சமபோஷா ரொட்டி

எளிய மற்றும் சத்தான சமோபாஷா ரோட்டி செய்முறை தமிழில். பட்டர் மற்றும் வெங்காய சம்பலுடன் பரிமாறக்கூடிய ஒரு ஆரோக்கியமான மற்றும் சுவையான உணவு பண்டம்.

 சுவையான 12 ரொட்டி தயாரிப்பது எப்படி ?

தேவையான பொருட்கள் 

  • சமபோஷா மாவு - 200கிராம் 
  • சி. வெ. வெங்காயம் - 2 மே. க 
  • சி. வெ. பச்சை மிளகாய் - 1மே.க 
  • தேங்காய்ப்பூ - 3 மே. க 
  • முருங்கையிலை - 8 மே.க 
  • தே.எ/ மாஜரின் - 2 மே.க (மட்டமாக)
  • பால் - 1/2 தம்ளர் 
  • கரட் - 100 கிராம் 
  • உப்புத்தூள் - அளவிற்கு
  • மிளகுத்தூள் - அளவிற்கு

செய்முறை 

  1. முருங்கையிலையை துப்பரவு செய்து கழுவிச் சிறு சிறு துண்டுகளாக வெட்டுக.
  2. கரட்டை துப்பரவு செய்து கழுவி ஸ்கிறேப்பரில் துருவிக் கொள்க.
  3. தாச்சியை அடுப்பில் வைத்து 2 மே.க மாஜரின் விட்டுக் கொதித்ததும் சிறிதாக வெட்டிய வெங்காயம்,பச்சைமிளகாய் என்பவற்றை வதங்கவைத்து வதங்கியதும் முருங்கையிலை, கரட் என்பவற்றையிட்டு சிறிது நேரம் மூடி வதங்க விடவும். இவை ஓரளவு வதங்கியவுடன் தேங்காய்ப்பூ, மிளகுத்தூள், உப்புத்தூள் என்பவற்றையிட்டு நன்கு சேர்த்துக் கொண்டபின்பு அடுப்பில் இருந்து இறக்கி கொள்க.
  4. சமபோஷா மாவை அரித்துப் பத்திரத்திலிட்டு தாளித்த கலவையை அதனுள் கொட்டிப் பாலும் விட்டு அளவிற்கு தண்ணீரும் விட்டு ரொட்டிமாப் பாதத்திற்குக் குழைத்து உருண்டைகளாக உருட்டி,ரொட்டி போல் தட்டி எண்ணெய் பூசிய தோசைக் கல்லிலிட்டு வாட்டி எடுத்துக் கொள்க.

          

Post a Comment

0 Comments