Bombay Toast Recipe Tamil - பொம்பே டோஸ்ட்

டயட்டில்  இருப்பவர்களா நீங்கள்? அல்லது சுவையான சூடான காலை உணவை விரும்புபவரா ?, இதோ உங்களுக்கான பதில் எளிதான காரமான பம்பாய் டோஸ்ட். எளிய செய்முறை தமிழில்!

12 துண்டுகள்

தேவையான பொருட்கள்

  • பாண் இறாத்தல் : ( 12 துண்டுகள் ) 
  • முட்டை : 2
  • பால் : 1/2 போத்தல்
  • வனிலா : 1 மே . க .
  • சீனி : 3 மே . க ( நிரப்பி )
  • மாஜரின் : 1 மே . க . ( நிரப்பி )

சீனிக்குப் பதிலாக அளவிற்கு உப்புத்தூள், மிளகுத்தூள் என்பனவும் சேர்த்துக் கொள்ளலாம். 

செய்முறை  

பாணின் நான்கு கரைகளையும் வெட்டி நீக்கிவிட்டுப் பாணின் உட்பகுதியை மட்டும் 1/2 " தடிப்பான 12 துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்க.

பாத்திரத்தில் முட்டையை உடைத்துவிட்டுச் சீனியும் சேர்த்து அடித்துக் கொண்டபின் காய்ச்சி நன்கு ஆறிய பாலை அடித்த முட்டையினில் விட்டு வனிலாவும் சேர்த்து அடித்துக் கொள்க.

பின்பு தோசைக் கல்லை அடுப்பில் வைத்துச் சூடானதும், சிறிதளவு மாஜரினைப்போட்டு உருகவிட்டு பரவலாகப் புரட்டிக் கொண்டபின் பாண்துண்டுகளை அடித்து வைத்துள்ள கலவையில் தோய்த்துத் தோசைக்கல்லில் போட்டு வாட்டி எடுத்த பின்னர் பரிமாறலாம். 

குறிப்பு: ஒவ்வொரு முறையும் பாண் வாட்டுவதற்கு முன்பு சிறிதளவு மாஜரினைப் போட்டு உருகவிட்ட பின்னரே பாணை வாட்டுதல் வேண்டும்.

Post a Comment

0 Comments