Prawn Upma Recipe - இறால் உப்புமா

 

இறால் உப்மா ஓர் அசைவ வகை ராவா உப்மா ஆகும். வீட்டில் இலகுவாக தயாரிக்க ரெசிபி தமிழில். இந்த அசத்தலான மாறுபட்ட உப்புமாவை தயாரித்து உங்கள் காலை உணவை மேலும் சுவையாகுங்கள்.

2-3 பேருக்கு போதுமானது 

தேவையான பொருட்கள் 

  • இறால் - 250 கிராம் 
  • ரவ்வை - 300 கிராம் 
  • நெய் - 1 மே.க 
  • சின்ன வெங்காயம் - 100 கிராம் 
  • இஞ்சி - 1 துண்டு 
  • உள்ளி - 2 பல்லு 
  • பச்சைமிளகாய் - 8
  • தேங்காயெண்ணை - 2 மே.க 
  • கடுகு - 3 சிட்டிகை 
  • கறிவேப்பிலை - 1 நெட்டு 
  • தக்காளிப்பழம் - 2
  • உப்பு - அளவிற்கு 

செய்முறை  

  1. வெங்காயம் , உள்ளி , இஞ்சி , பச்சைமிளகாய் என்பவற்றை துப்பரவு செய்து அளவான துண்டுகளாக வெட்டிக் கொள்க.

  2. தாக்களிப்பழத்தை துப்பரவு செய்து துண்டுகளாக வெட்டி கிரைண்டரிலிட்டு அடித்துக்கொள்க.

  3. இறாலைத் துப்பரவு செய்து கழுவிக் கொள்க.

  4. பாத்திரத்தில் தக்காளிச்சாறு ஊற்றி இறாலை அதனுளிட்டு அளவிற்கு உப்பு சேர்த்து கொதிக்கவைத்து இறால் அவிந்து நீர்த்தன்மை வற்றிவரும் போது இறக்கிக் கொள்க.

  5.  தாச்சியில் நெய்யையிட்டு உருகியதும் துப்பரவு செய்த ராவ்வையைக் கொட்டி மெல்லிய பொன்னிறமாக வறுத்தெடுத்துக்கொள்க.

  6. தாச்சியில் தேங்காயெண்ணையை விட்டுக் கொதித்ததும் கடுகையிட்டு வெடிக்க வைத்து வெங்காயம் , பச்சைமிளகாய் , உள்ளி , இஞ்சி , கறிவேப்பிலை என்பவற்றையிட்டு வதங்கவிட்டு அதனுள் 2 தம்ளர் தண்ணீர் விட்டுக் கொதித்ததும் ரவ்வையைச் சிறிது சிறிதாக சேர்த்துக் கிளறி இறால் கலவையையும் சேர்த்துக் கலந்து இறக்கிக் கொள்க.    

Post a Comment

0 Comments