Homemade Pound Cake Recipe - பவுண்ட் கேக்

வீட்டில் பவுண்டு கேக் தயாரிப்பது எப்படி என்பதை அறிக. ரெசிபி தமிழில்!  இந்த எளிய செய்முறையானது மிருதுவான மற்றும் சுவையான ஒரு கேக் விருந்தை அளிக்கக்கூடியது. இன்றே முயற்சியுங்கள்!

40  துண்டுகள் 

செய்முறை 

  • முட்டை - 3
  • சீனி - 250 கிராம் 
  • மா - 250 கிராம் 
  • மாஜரின் - 200 கிராம் 
  • பேக்கிங் பவுடர் - 1 தே.க 
  • தேசித்தோல் துருவல் - 1 தே.க 

செய்முறை 

  1. சீனியை பத்திரத்திலிட்டு முட்டையை உடைத்துவிட்டு சீனி முற்றாக கரையும் வரை அடித்துக் கொள்க.

  2. மாவுடன் பேக்கிங் பவுடர் கலந்து 5 முறை அரிக்குக.

  3. பின்பு முட்டையினுள் தேசித்தோல் துருவலையிட்டு சேர்த்து அடித்து அரித்த மாவைச் சிறிது சிறிதாகத் தூவி முழுவதுமாகச் சேர்த்துக் கொண்டபின் , மாஜரினை கொதிநீருள்ள பாத்திரத்தில் வைத்து முக்கால் பதமாக உருகியவுடன் அடித்த கலவையுள் ஊற்றி நன்றாக அடித்து மாஜரின் பூசி ஓயில்பேப்பர் பரவிய கேக் தட்டில் ஊற்றி 350  பரணைட் இல் 30 நிமிடக்கள் பேக் செய்து கொள்க.

Post a Comment

0 Comments