Potato Chicken Soup Recipe - உருளைக்கிழங்கு சிக்கின் சூப்

 

கிரீமி உருளைக்கிழங்கு சிக்கின் சூப் ரெசிபி தமிழில்! உருளைக்கிழங்கு மற்றும் பிற பொருட்களுடன் எளிதான சிக்கன் சூப் செய்முறை. வீட்டிலேயே இலகுவாக தயாரிக்க கூடிய எளிய சூப் ரெசிபி.

4 - 5 பேருக்கு போதுமானது 

தேவையான பொருட்கள் 

  • உருளைக்கிழங்கு - 100 கிராம் 
  • பச்சைப்பட்டாணிக் கடலை - 100 கிராம் 
  • கோழி இறைச்சி - 250 கிராம் 
  • தேங்காய்ப் பால் - 1 தம்ளர் 
  • மிளகுதூள் - அளவிற்கு 
  • உப்புத்தூள் - அளவிற்கு 
  • தண்ணீர் - 4 1/2 தம்ளர் 
  • சலட் இலை - சிறிது 

செய்முறை 

  1. கடலையை 6 மணிநேரம் ஊறவைக்குக.

  2. உருளைக்கிழங்கை அவித்தெடுத்து சிறு துண்டாக வெட்டுக.

  3. கடலையையும் உருளைக்கிழங்கையும் தனித்தனியாக கிரைண்டரிலிட்டு ஒவ்வொன்றிற்கும் 3/4 தமிளர்படி தண்ணீர்விட்டு அடித்தெடுத்துக் கொள்க.

  4. இறைச்சியைப் பாத்திரத்திலிட்டு 3 தம்ளர் தண்ணீர் விட்டு அவிக்குக. இறைச்சி அவிந்ததும் இறக்கி      இறைச்சியைச் சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொண்டபின்பு பிறிதொரு பாத்திரத்தில் சிறு துண்டாக வெட்டிய இறைச்சி, உருளைக்கிழங்குக் கலவை, கடலைக் கலவை, இறைச்சி , அவித்த தண்ணீர் என்பவற்றையிட்டு அடுப்பில் வைத்துக் காய்ச்சுக. கலவை பொங்கிக் கொதிக்கத் தொடங்கியதும்   பால், உப்புத்தூள், மிளகுதூள் என்பவற்றைச் சேர்த்து இறக்கிக் சலட் இலையைப் பொடியாக வெட்டித் தூவிக் கொண்டபின் பரிமாறலாம்.

Post a Comment

0 Comments