Pinnal samosa Recipe - பின்னல் சமோசா

 
வீட்டில் மிருதுவான பின்னல் சமோசாவை செய்வது எப்படி? ரெசிபி தமிழில் இதோ! இது உருளைக்கிழங்கு உள்ளீடுடன் கூடிய ஓர் காரமான மொறுமொறுப்பான சிற்றுண்டியாகும். 

தேவையான பொருட்கள் 

  • மைதா - 250 கிராம் 
  • எண்ணெய் - 500 மில்லி லீட்டர் 
  • உருளைக்கிழங்கு - 500 கிராம் 
  • பச்சைப்பட்டாணி - 100 கிராம் 
  • கரட் - 250 கிராம் 
  • பெரிய வெங்காயம் - 1
  • இஞ்சி , வெ.பூண்டு விழுது - 1 தேக்கரண்டி 
  • பச்சைமிளகாய் - 3
  • காரப்பொடி - 1/2 தேக்கரண்டி 
  • உப்பு - தேவையான அளவு 
  • கொத்தமல்லித் தழை - கால் கட்டு 
  • தக்காளி - 01

செய்முறை 

  1. மைதா மாவில் உப்பு, தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து 10 நிமிடம் ஊற வைக்கவும்.

  2. உருளைக்கிழங்கு , கரட் , பச்சைபட்டாணி வேகவைத்துக் கொள்ளவும்.

  3. வாணலியில் எண்ணெய் விட்டு நறுக்கிய பெரிய வெங்காயம் , பச்சைமிளகாய் , இஞ்சி , வெ.பூண்டு விழுதைப் போட்டு வதக்கவும்.

  4. தக்காளி , வேக வைத்த காய்கறிகள் போட்டு தேவையான அளவு உப்பு போட்டு, மிளகாய்த்தூள் கால் தேக்கரண்டி சேர்த்து நன்றாக வதக்கி நறுக்கிய பச்சை கொத்தமல்லி தூவி இறக்கி ஆற வைக்கவும்.

  5. மைதாவை சிறிய அப்பளமாக போட்டு பூரணத்தை நடுவில் நீள வாக்கில் வைத்து இரண்டு ஓரங்களையும் கத்தியால் கீறவும்.

  6. கீறியதை ஒன்றன் மேல் ஒன்று போட்டு நன்றாக அழுத்திவிடவும்.

  7. பின்னல் மாதிரி அழகாக வரும். எல்லாவற்றையும் இதே மாதிரி செய்து கொள்ளவும்.வாணலியில் எண்ணெயை ஊற்றி அடுப்பை சிம்மில் வைத்து ஒவ்வொன்றாக போட்டு சிவக்க வெந்ததும் தட்டில் வைத்து பரிமாறவும்.  

Post a Comment

0 Comments