Pav Bhaji Recipe - பாவ் பாஜி

பாவ் பாஜி என்பது ஒரு காரமான காய்கறி கிரேவி ஆகும், இது ஒரு இந்திய துரித உணவில் மென்மையான இரவு உணவுகளுடன் பரிமாறப்படுகிறது. பிரபலமான இந்திய ஸ்ட்ரீட் உணவான பாவ் பாஜியை எவ்வாறு தயாரிப்பது என்பதை அறிக. ரெசிபி தமிழில்!

சுவையான பாவ் பாஜி 

தேவையான பொருட்கள் 

  • கரட் - 2
  • குடைமிளகாய் - 1
  • பீன்ஸ் - 4
  • உருளைக்கிழங்கு - 2 
  • நறுக்கிய முட்டைக்கோஸ் - 1 1/2 கப் 
  • பட்டாணி - கால் கப் 
  • நறுக்கிய கோலிஃபிளவர் - 1 1/2 கப் 
  • மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி 
  • பாவ் பாஜி மசாலா - 1 மேசைக்கரண்டி 
  • மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி 
  • இஞ்சி , வெ.பூண்டு விழுது - 3/4
  • மேசைக்கரண்டி 
  • நறுக்கிய வெங்காயம் - 1/2 கப் 
  • பட்டர் - தேவையான அளவு 
  • பன் - 4
  • வெள்ளை எள்ளு - 1 தேக்கரண்டி 
  • உப்பு - 1 தேக்கரண்டி 

செய்முறை 

  1. பட்டாணியை முதல் நாள் இரவே ஊற வைத்துவிடவும். கரட், குடைமிளகாய், பீன்ஸ் மூன்றையும் சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். முழு உருளைக்கிழங்கை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். கொதிக்கும் நீரில் கோலிஃபிளவரை துண்டுகளாக நறுக்கி போட்டு 5 நிமிடம் கழித்து எடுத்து விடவும்.

  2. பெரிய வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சி, வெ.பூண்டு விழுது மற்றும் மசாலா பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும்.

  3. குக்கரில் நறுக்கி வைத்திருக்கும் எல்லா காய்கறிகளையும் போட்டு, அதனுடன் ஊற வைத்த பட்டாணி சேர்த்து, ஒரு கப் தண்ணீர் ஊற்றி சுமார் 20 நிமிடம் வேக வைக்கவும். பின்னர் வெந்ததும் எடுத்து, காய்கறிகளை ஒரு குழிக்கரண்டியால் நன்கு குழைய மசித்து வைத்துக் கொள்ளவும்.

  4. வாணலியில் பட்டர் உருகியதும், பொடியாக நறுக்கின வெங்காயத்தை போட்டு 2 நிமிடம் வதக்கவும். அதனுடன் நறுக்கின தக்காளி, இஞ்சி, வெ.பூண்டு சேர்த்து மேலும் ஒரு நிமிடம் வதக்கவும்.

  5. பச்சை வாசனை அடங்கியதும் மிளகாய் தூள், மஞ்சள் தூள், பாவ் பாஜி மசாலா போட்டு சுமார் 3 நிமிடம் கிளறி விடவும். அதன் பிறகு மசித்து வைத்துள்ள காய்கறிகளைப் போட்டு கிளறி விட்டு, ஒரு தேக்கரண்டி உப்பு சேர்த்து 2 நிமிடம் நன்கு கிளறி விடவும். 

  6. கிளறிய பிறகு முக்கால் கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். கொதித்து நன்கு கெட்டியானதும் இறக்கி விடவும்.

  7. பன்னை இரண்டாக வெட்டி அதன் இருபுறங்களிலும் பட்டர் தடவி மேலே எள்ளை தூவவும். பிறகு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து ஒரு தேக்கரண்டி பட்டர் ஊற்றி காய்ந்ததும் அதில் பட்டர் தடவிய பன்னை போட்டு வாட்டி எடுத்துக் கொள்ளவும்.

  8. இப்போது சுவையான பாவ் பாஜி தயார். தயார் செய்து வைத்திருக்கும் மசாலாவில் கொத்தமல்லித் தழை தூவி மேலே பட்டர் வைத்தது, பன்னுடன் பரிமாறவும்.            

Post a Comment

0 Comments