Easy Pancake Recipe - பான் கேக்

பிளப்பியான மற்றும் சுவையனை பான் கேக் ரெசிபி தமிழில் இதோ! மிகவும் எளிதாக செய்யக்கூடிய ஆரோக்கியமான ஓர் உணவு பண்டம்.

8 பான் கேக் 

தேவையான பொருட்கள் 

  • கோதுமை மாவு - 250 கிராம் 
  • மஞ்சள்த்தூள் - அளவிற்கு
  • உப்புத்தூள் - அளவிற்கு
  • அப்பச்சோடா - 1 சிட்டிகை 
  • ஏலப்பொடி - 1 தே .க (மட்டமாக)
  • தேங்காய்ப்பூ - 16 மே .க (நிரப்பி)
  • சீனி - 4 மே .க (நிரப்பி)
  • தேங்காய் எண்ணெய் - 2 மே .க (தோசைக்கல்லிற்கு பூசுவதற்கு)

செய்முறை 

  1. தேங்காயைத் துருவலை பாத்திரத்திலிட்டு அளவிற்கு மஞ்சள்தூளும் சீனியும் சேர்த்து நன்றாகக் கலந்து   வைத்துக் கொள்க.
  2. கோதுமைமாவுடன் அப்பச்சோடா, மஞ்சள்த்தூள், என்பவற்றை கலந்தரித்துப் பாத்திரத்திலிட்டு, அளவிற்கு உப்புநீரும், தண்ணீரும் விட்டுத் தோசைமாப்  பதத்திற்குக் கரைத்து வைத்துக் கொள்க.
  3. பின்பு தோசைக்கல்லை அடுப்பில்  வைத்து சூடானதும், ஓர் துணியில் எண்ணையை நனைத்துத் தோசைக்கல் முழுவதும் பரவலாக்ப்புரட்டிக் கொண்ட பின் கரைத்து வைத்த மா கரைசலை மிக மெல்லிய தோசையாக வார்த்து,  ஈரத்தன்மை மாற தொடங்கியதும் தயாரித்து வைத்துள்ள தேங்காய்ப்புக்கலவையில்  இரண்டு மேசைக்கரண்டி அளவைத் தோசையின் நடுவே  வைத்து வட் டத தோசையின் இ ர ண்டுக்கரைப்பகுதிகளையும் வைத்த தேங்காய்ப்பூவை மூடும் வண்ணம் ஒன்றன்மேல்  மடித்து அமர்த்திக் கொண்டபின், மற்றய இரு அந்தங்களையும் மடித்து அமர்த்தி ஓர் நீள்சதுர வடிவில் ஆக்கிக் கொண்ட பின்பு மறுபுறம் திருப்பிப் போட்டு வேகவிட்டு எடுத்து ஓரளவு சூடுடேயே பரிமாறலாம்.
  4. இவ்வண்ணம் மற்றைய  பான் கேக்குகளையும் தயாரித்துக் கொள்ளலாம்.

குறிப்பு 

தேங்காய்ப்புக் கலவைக்குப் பதிலாக உருளைக்கிழக்குப் புரட்டல் கறிவைத்தும் இவ்வண்ணம் தயாரித்து கொள்ளலாம். இது கறிரொட்டி எனப்படும். 500 கிராம் கிழங்கில் கறி தயாரிக்க வேண்டும்.

        

Post a Comment

0 Comments