milk appam - பால் அப்பம்


 25 அப்பம் தயார் 

தேவையான பொருட்கள் 

  • பச்சையரிசி - 1 சுண்டு 
  • தேங்காய் - 1 
  • அவித்த கோதுமைமா - 1/2 சுண்டு 
  • உப்பு - அளவிற்கு
  • அப்பச்சோடா - 1 சிட்டிகை 

செய்முறை 

  1. அரிசியைக் கழுவிக் களைந்து 6 மணிநேரம் ஊறவைத்தெடுத்து, முதலாம்தரம் இடித்து அரித்து வரும் குருணலில் 1/4 சுண்டு நடுத்தரக் குறுணலை எடுத்து வேறாக வைத்துவிட்டு மிகுதிக் குருணல் முழுவதையும் இடித்தரித்து மாவை எடுத்துக் கொள்க.
  2. குருணலை பாத்திரத்திலிட்டு, நன்றாகப் பொங்கிக் கொதித்த 2 தம்ளர் கொதிநீரை ஊற்றி உடனடியாக நன்றாகக் கலக்கி 1/2 தம்ளர் குளிர்நீரைச் சேர்த்து (கட்டை கரையாமலிருப்பதிற்கு) நன்றாக ஆறவைக்கவும்.
  3. பின்பு மாவைப் பிறிதொரு பாத்திரத்திலிட்டு ஆறிய கஞ்சியை ஊற்றி அப்பச்சோடா, அளவிற்குத் தண்ணீர் என்பன சேர்த்து,நீர்த்தன்மையான கூழ்ப் பதமாகக்  கரைத்து 12 மணிநேரம்வரை புளிக்க வைத்தெடுத்து உப்புச் சேர்த்துக் கொள்க.
  4. தேங்காயைத் துருவி 2 தம்ளர் தண்ணீரைச் சிறிது சிறிதாகவிட்டு கெட்டியான பாலகப் பிழிந்து எடுத்துக் கொள்க. 
  5. பின்பு எண்ணெய் பூசிய தாச்சியை அடுப்பில் வைத்து அப்பமாவை ஊற்றி ஒருமுறை சுற்றிக்கொண்டபின் 1 கரண்டி பாலை விட்டு மூடி வேகவைத்தெடுக்க.       

Post a Comment

0 Comments