Oothu maavu kool Recipe Tamil - ஊதுமாக் கூழ்

ஊதுமாக் கூழ்  என்பது ஒரு சில சத்தான அடிப்படை பொருட்களால் செய்யப்படக்கூடிய ஒரு ஆரோக்கியமான கஞ்சி வகையாகும். முழுமையான ரெசிபியை இங்கே தமிழில் பெற்றுக்கொள்ளுங்கள்.

6 பேருக்குப் போதுமான சுவையான ஊதுமாக் கூழ்

தேவையான பொருட்கள் 

  • புழுங்கலரிசி - 1/2 சுண்டு 
  • நற்சீரகம் - 25 கிராம் 
  • மிளகு - 25 கிராம் 
  • மஞ்சள் - 1'' நீளத்துண்டு 
  • கற்கண்டு - 250 கிராம் 
  • தேங்காய் - 1
  • உப்பு - அளவிற்கு

செய்முறை 

  1. அரிசியைக் கழுவி, மூன்று மணி நேரம் ஊறவைத்து எடுத்து, அதனுடன் மஞ்சள், மிளகு, நற்சீரகம் என்பவற்றைச் சேர்த்துப் பசைபோல அரைத் தெடுத்து கொள்க.(தேவையாயின் சிறிதளவு நீர் சேர்த்து அரைக்குக.)

  2. தேங்காயைத் துருவி, சிறிது சிறிதாகத் தண்ணீர் விட்டுப் பிழிந்து, 3 1/2 தம்ளர் பாலை எடுத்து வைத்துக் கொள்க.

  3. கற்கண்டை ஓரளவு சிறு துகள்களாக நொருக்கி வைத்துக் கொள்க.

  4. பின்பு தாச்சியில் அரைத்த கூட்டையும், கற்கண்டையும் போட்டுப் பாலையும் விட்டுக் கலக்கிக் கொண்டபின் அடுப்பில் வைத்து காய்ச்சவும். கலவை கூழ்ப்பதமாகத் தடிக்க தொடங்கியதும் அளவிற்கு  உப்புச் சேர்த்துக் கலக்கி இறக்கிச் சூட்டுடனேயே பரிமாறலாம்.  

Post a Comment

0 Comments