Onion Soup Recipe - வெங்காய சூப் / உள்ளி சூப்

 

இந்த அட்டகாசமான வெங்காய சூப் தயாரிக்க சில எளிய பொருட்கள் மட்டுமே தேவை, வெங்காயம் மற்றும் மசாலாப் பொருட்கள் கொண்டு தயாரிக்க கூடிய ஓர் சுவையான சூப் செய்முறையாகும். ரெசிபி தமிழில்.

3 - 4 பேருக்கு போதுமானது 

தேவையான பொருட்கள் 

  • உள்ளி / சின்ன வெங்காயம் - 250 கிராம் 
  •  மாஜரின் - 50 கிராம் 
  • கோன்பிளா - 1 மே.க (நிரப்பி)
  • சிக்கன் சூப் - 3 துண்டு 
  • தண்ணீர் - 1 தம்ளர் 
  • தேங்காய்ப் பால் - 4 தம்ளர் 
  • சீனி - 1 தே.க 
  • உப்புத்தூள் - அளவிற்கு 
  • மிளகு தூள் - அளவிற்கு 
  • சோயா சோஸ் - 3 மே.க 

செய்முறை 

  1. வெங்காத்தைத் துப்பரவு செய்து கழுவிச் சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்க.

  2. தேங்காய்ப் பாலில் சிக்கின் கியூப் கட்டிகளை கரைத்துக் கொள்க.

  3. தாய்ச்சியை அடுப்பில் வைத்து மாஜரீனையிட்டு உருகியதும் அதனுள் வெட்டிய வெங்காயத்தையிட்டு பொன்னிறமாக வதங்க விட்டு வதங்கியதும் 1 தம்ளர் தண்ணீரில் கரைத்த கோன்பிளா கரைசல் 4 தம்ளர் பாலில் கரைத்த சிக்கன் சூப் கரைசல் என்பவற்றையிட்டு 1 தே . க சீனி , உப்புத்தூள் , மிளகுதூள் என்பன அளவிற்கு இட்டு நன்றாகக் கொதித்ததும் சோயாசோஸ் விட்டு இறக்கிக் கொள்க.

குறிப்பு 

  • பாலிற்குப் பதிலாக 4 தம்ளர் இளஞ்சூடான தண்ணீரில் சிக்கின் கியூப்பைக் கரைத்துக் கொள்ளலாம்.       

Post a Comment

0 Comments