Odiyal Flour Cake Recipe - ஒடியல் மா கேக்

 

இலங்கையின் பாரம்பரிய செய்முறையான ஒடியல் மா கேக்கிற்கான முழு செய்முறையையும் தமிழில் பெற்றுக்கொள்ளுங்கள்!

60 துண்டுகளாக  பகிர கூடிய  ஒடியல் மா கேக் 

தேவையான பொருட்கள் 

  • ஒடியல் மாவு - 400 கிராம் 
  • கோதுமை மாவு - 100 கிராம் 
  • சீனி - 500 கிராம் 
  • மாஜரின் - 500 கிராம் 
  • பேக்கிங் பவுடர் - 3 மே . க ( மட்டமாக)
  • முட்டை - 10 
  • தேசிப்புளி - 1 மே. க 
  • பிளம்ஸ் - 100 கிராம் 
  • பனானா எசன்ஸ் - 1/2 தே . க 

 செய்முறை 

  1. ஒடியல்  மாவை அரித்துத் தண்ணீர்வீட்டுக் கூழ்ப்பதமாகக் கரைத்து தேசிப்புளியும் சேர்த்துக் கலந்து ஒரு மணி நேரம் வரை  ஊற வைத்துத் துணியிலிட்டு ஈரத்தன்மை முற்றாக நீங்கும் வரை நன்றாகப் பிழிந்தெடுத்துச்  சிறு துகள்களாக உதிர்த்தி உலர வைத்துக் கொள்க.

  2. மாவுடன் பேக்கிங் பவுடர் கலந்து நான்கு முறை அரித்து வைத்துக் கொள்க.

  3. பாத்திரத்தில் மாஜரினைப் போட்டு சீனியும் சேர்த்துச் சீனி முற்றாகக் கரையும் வரை அடித்துக் கொள்க.

  4. முட்டைகளை உடைத்துப் பாத்திரத்தில் விட்டு நுரை பொங்கும் வண்ணம் நன்றாக அடித்துக் கொண்ட பின்பு முட்டையின் நுரையை மட்டும் அடித்து வைத்துள்ள  மாஜரின் கலவையில் சிறிது சிறிதாக விட்டு  முழுவதுமாக சேர்த்து அடித்துக் கொள்க.

  5. பின்பு அடித்த மாஜரின் கலவையில் அரித்து வைத்துள்ள கோதுமை மாவு, ஒடியல் மாவு என்பவற்றை சிறிது சிறிதாகத்  தூவி முழுவதுமாக சேர்த்துக் கொண்ட பின்   பனானா எசன்ஸ், பிளம்ஸ் என்பவற்றையிட்டு கலந்து கொள்க.

  6. பின்பு ஓயில்ப் பேப்பர் பரவி மாஜரின் பூசிய கேக் தட்டில் அடித்து வைத்துள்ள மாக் கலவையினை ஊற்றிப்பரவி பேக்  செய்து ஆறிய பின்பு துண்டுகளாக வெட்டி எடுத்துப் பரிமாறலாம்.



Post a Comment

0 Comments