Simple Noodles Recipe - நூடில்ஸ்

சுவையான நூடில்ஸ் ரெசிபி தமிழில். எளிய, அன்றாட பொருட்களைப் பயன்படுத்தி செய்யக்கூடிய ஓர் விரைவான இரவு உணவு!

 5 பேருக்கு போதுமான சுவையான நூடில்ஸ் 

தேவையான பொருட்கள் 

  • நூடில்ஸ் - 1 பக்கற்( 400 கிராம்)
  • கரட் - 125 கிராம் 
  • லீக்ஸ் - 125கிராம் 
  • உருளைக்கிழங்கு - 125கிராம் 
  • போஞ்சி - 125கிராம் 
  • கோவா - 125கிராம் 
  • தக்காளிப்பழம் - 125கிராம் 
  • முட்டை - 2
  • மாஜரின் - 50கிராம் (2 மே.க நிரப்பி)
  • சிறிதாக வெட்டிய வெங்காயம் - 2மே .க (நிரப்பி)
  • சிறிதாக வெட்டிய உள்ளி - 1தே.க (நிரப்பி)
  • சிறிதாக வெட்டிய கறிவேப்பிலை - 1தே.க (நிரப்பி)
  • மிளகு தூள் - அளவிற்கு
  • உப்புத்தூள் - அளவிற்கு

செய்முறை 

  1. கரட், லீக்ஸ், உருளைக்கிழங்கு, போஞ்சி என்பவற்றை சிறுசிறு துண்டுகளாக வெட்டிக் கழுவிப் பாத்திரத்திலிட்டு உப்புத்தூள் சேர்த்துப் புரட்டி வைத்துக் கொள்க. 
  2. முட்டையை அவ்வித்துச் சிறு சிறு துண்டுகளாக வெட்டிவைத்துக் கொள்க.
  3. கோவாவையும், தாக்களிப்பழத்தையும் தனித்தனியாகச் சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்க.
  4. பின்பு மாஜரினை தாச்சியிலிட்டு உருக வைத்த பின்பு வெட்டிய வெங்காயம், பச்சை மிளகாய், உள்ளி, கறிவேப்பிலை என்பவற்றைப் போட்டுச் சிறிது நேரம் வதங்கவிட்ட பின்பு உப்புப் பிரட்டி வைத்துள்ள மரக்கறிகளையும் கொட்டி நன்கு கிளரி மூடி வதங்கவிடவும்.  
  5. மரக்கறி வகைகள் முக்கால் பதமாக வதங்கியதும் வெட்டிவைத்துள்ள கோவாவைச் சேர்த்து சிறிது நேரம் மூடி வேகவிட்ட பின்பு மிளகுத்தூள், தக்காளிப்பழம் என்பவற்றையும் சேர்த்து வேக விட்டு தாச்சியை அடுப்பில் இருந்து இறக்கிக் கொள்க.
  6. பின்பு நூடில்சை வாயகன்ற பத்திரமொன்றில் போட்டு அளவிற்கு உப்புச் சேர்த்து, நன்றாகப் பொங்கிக் கொதித்த தண்ணீரை நூடில்ஸ் உள்ள பாத்திரத்தில் நூடில்ஸ் மறையும் வரை ஊற்றி இறுக மூடி ஐந்து நிமிடம் வைத்துக் கொண்ட பின்பு தண்ணீரை வடித்து ஊற்றி விட்டு குளிர்ந்த நீரை அதனுள் விட்டு மீண்டும் தண்ணீரை வடித்துக் கொள்க.
  7. பின்பு நூடில்ஸ்சைப் பெரிய பாத்திரத்தில் போட்டு, வதங்கிய மரக்கறி வெட்டிய முட்டை என்பவற்றையும் சேர்த்து நன்கு கிளறிக் கொண்ட பின் நூடில்ஸ்சை இறால் குழம்பு, இறைச்சி புரட்டல் என்பவற்றுடன் பயன்படுத்தலாம்.
  8. முட்டையை வதங்கி வரும் மரக்கரிக்குள்ளும் உடைத்துவிட்டு,நன்கு கிளறிச் சேர்த்துக் கொள்ளலாம்.

      

     

Post a Comment

0 Comments