Tasty Nelli Crush Recipe - நெல்லிக்கிரஸ்

 

புத்துணர்ச்சியூட்டும்  நெல்லிகிரஸ் பானம். ரெசிபி தமிழில் பெற்றுக்கொள்ளுங்கள்!  உங்கள் தாகத்தைத் தணிக்கும் இந்த நெல்லி பனைத்தை இன்றே செய்து பருகுங்கள். முழு ரெஸிபியையும் இங்கே காணலாம்!

1 போத்தல் 

தேவையான பொருட்கள் 

  • முழு நெல்லிக்காய்ச்சதை - 500 கிராம் (விதை நீங்கியது)
  • சீனி - 1000 கிராம் 
  • தண்ணீர் - 1 தம்ளர் 
  • சித்திரிக்கமிலம் - 1 தே.க (மட்டாக)
  • வனிலா - 2 மே.க 
  • சுண்ணாம்பு நீர் - 1 தே.க 
  • பச்சைக் கலரிங் - 1 மே.க 

செய்முறை 

  1. நெல்லிக்காய்ச் சதையை உரலில் இட்டு நன்கு இடித்தெடுத்துப் பாத்திரத்தில் போட்டு 2 தம்ளர் தண்ணீரும் ஒரு தேக்கரண்டி சுண்ணாம்பு நீரும் விட்டு நன்றாகக் கசக்கிப்பிழிந்து சாறு எடுத்துக்கொண்டு, அதை மெல்லிய துணியில் வடித்தெடுத்துக் கொள்க.

  2. பின்பு தாச்சியில் (அலுமினியம் அல்லாத பாத்திரத்தில்) வடித்து வைத்துள்ள சாற்றை விட்டு, சீனியும் சேர்த்து அடுப்பில் வைத்துக் காய்ச்சுக. கலவை பொங்கிக் கொதிக்கத் தொடங்கியதும், உடனடியாக அடுப்பிலிருந்து இறக்கி ஆறவிடவும்.

  3. கலவை நன்றாக ஆறியதும் கலரிங், வனிலா, சித்திரிக்கமிலம் என்பவற்றையிட்டுக் கரைத்தபின்பு தொற்று நீக்கிய போத்தலில் ஊற்றி அடைத்து வைத்துப் பயன்படுத்தலாம்.

குறிப்பு 

  • நெல்லிக்காய்ச் சதையை கிரைண்டரில் போட்டு அரைத்துக் கொள்ளலாம்.

  • அரைநெல்லிக்காய் ஆயின், ஒரு கிலோ சீனியைப் போட்டு காய்ச்சுதல் வேண்டும். ஆனால் சித்திரிக்கமிலம் பாவிக்க வேண்டியதில்லை.

Post a Comment

0 Comments