Mushroom Rice Recipe - மஸ்றூம் றைஸ்

விரைவாக  மற்றும் எளிதாக செய்யக்கூடிய ருசியான காளான் ரைஸ் ரெசிபி தமிழில். வெறும் 15 நிமிடங்களிலேயே சுவையான ஒரு விருந்தை வீட்டிலேயே செய்யலாம்.


2 பேருக்கு போதுமான சுவையான மஸ்றூம் றைஸ்

தேவையான பொருட்கள் 

  • பாசுமதி அரிசி - 1 சுண்டு 
  • நெய் - 3 மே .க 
  • மிளகு - 10
  • கறுவா - 4துண்டு 
  • கராம்பு - 10 
  • ஏலம் - 10
  • பம்பாய் வெங்காயம் - 1
  • போஞ்சி - 50 கிராம் 
  • கரட் - 50 கிராம் 
  • கோவா - 50 கிராம் 
  • காளான் (மஸ்றூம் ) - 50கிராம் 

செய்முறை 

  1. வெங்காயம், கரட், கோவா, போஞ்சி,காளான் என்பவற்றைத் துப்பரவு செய்து தனித்தனியாக அளவான சிறு துண்டுகளாக வெட்டி வைக்குக.
  2. தாச்சியில் நெய்யை விட்டு உருகியபின், அதனுள் மிளகு, கறுவா, கராம்பு, ஏலம்  என்பவற்றையிட்டுப் பொரியவிடவும். அவை பொரிந்துவரும் போது வெங்காயம், கரட், போஞ்சி என்பவற்றையிட்டு வதங்க விடவும்.
  3. பின்பு அரிசியைக் கழுவி வதங்கிய கலவையிலிட்டு நன்கு கிளறிச் சேர்த்துக் கொண்டபின் 2 தம்ளர் தண்ணீர்விட்டு அரிசி அவிந்து வரும் போது இறக்கி வாயகன்ற பாத்திரத்தில் கொட்டிப் பரவி விடவும்.

   


Post a Comment

0 Comments