Mukkuttuk Kool Recipe - முக்கூட்டுக் கூழ்


 5 பேருக்கு போதுமான சுவையான முக்கூட்டுக் கூழ் 

தேவையான பொருட்கள் 

  • குரக்கன் - 250 கிராம் 
  • போட்டுக் கடலை - 250 கிராம் 
  • கச்சான் முத்து - 250 கிராம் 
  • ஏலப்பொடி - 1 தே. க (மட்டமாக)
  • சீனி - 6 மே . க (நிரப்பி)
  • தண்ணீர்/ தேங்காய்ப்பால் - 5 தம்ளர் 
  • உப்பு - 1 சிட்டிகை 

செய்முறை 

  1. குரக்கன், கடலை, என்பவற்றைத் தனித்தனியாகத் துப்பரவாக்கிக் கழுவிக்  காயவைத்தெடுத்துக் கொள்க.

  2. கச்சான் முத்து, கடலை என்பவற்றை தனித்தனியாகப் பொன்னிறமாக   வறுத்திடுத்துக் குரக்கனோடு சேர்த்துத் திரித்தெடுத்துக் கொள்க.

  3. இத் திரித்தெடுத்த மாவில் 1 தம்ளர் மாவையெடுத்துத் தாச்சியில் போட்டு 6 மே.க  சீனியும் இட்டுக் கலந்து, 5 தம்ளர் தண்ணீர் விட்டு கரைத்து அடுப்பில் வைத்துக் காய்ச்சுக.

  4. கலவை தடிக்கத் தொடங்கியதும் உப்பு, ஏலப்பொடி என்பன சேர்த்துக் கலக்கி இறக்கி ஆறிய பின்பு பரிமாறலாம். 

Post a Comment

0 Comments