Milk Powder Cake Recipe - பால் மாக் கேக்

 

பால் மாக் கேக்  ரெசிபி தமிழில். பால் இல்லாமல் உங்கள் வீட்டில் உள்ள பால் மாவை பயன்படுத்தி உங்கள் தேநீர் நேரத்திற்கான சுவையான ஓர் கேக்கை  இன்றே தயாரியுங்கள்.

50 - 55 துண்டுகள் (1 1/2'' x 1 1/2'')

தேவையான பொருட்கள் 

  • பால் மாவு - 1 பைக்கற் 
  • கோதுமை மாவு - 500 கிராம் 
  • மாஜரின் - 300 கிராம் 
  • பேக்கிங் பவுடர் - 2 தே .க (நிரப்பி )
  • அப்பச்சோடா - 1 தே .க(மட்டாக)
  • சாதிக்காய்த் தூள் - 1 தே .க (மட்டாக)
  • தண்ணீர் - 2 தம்ளர் 
  • பிளம்ஸ் - 100 கிராம் 
  • சீனி - 500 கிராம் 

செய்முறை 

  1. சீனியை கிரைண்டரிலிட்டு அரைத்தெடுக்குக.

  2. மாவுடன் பேக்கிங் பவுடர், அப்பச்சோடா என்பன கலந்து 5 முறை அரித்துக் கொள்க.

  3. பாத்திரத்தில் மாஜரினைப் போட்டு சீனியும் சேர்த்து சீனி கரையும்வரை நன்றாக அடித்துக் கொண்ட பின்பு பால் மாவை சிறிது சிறிதாகத் தூவிச் சேர்த்துக் கொள்க.

  4. பின்பு இவ் அடித்த கலவையில் தண்ணீரை சிறிது சிறிதாக ஊற்றிக் கலந்து கொண்ட பின்பு, அரித்து வைத்துள்ள கோதுமை மாவைச் சிறிது சிறிதாக தூவி முழுவதுமாகச் சேர்த்துக் கொண்டு சாதிக்காய்த் தூள், பிளம்ஸ் என்பவற்றையுமிட்டுச் சேர்த்து ஒரே பக்கமாக நன்றாக அடித்துக் கொள்க.

  5. பின்பு கேக் தட்டிற்கு ஒயில் பேப்பர் பரவி மாஜரின் பூசிக் கொண்ட பின்பு அடித்து வைத்துள்ள கேக் கலவையை ஊற்றி பேக் செய்து ஆறிய பின்பெடுத்துத் துண்டுகளாக வெட்டிப் பரிமாறலாம்.       

Post a Comment

0 Comments